Monday, November 11, 2024
Home > அரசியல் > இருநூறு நாட்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள்..! இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர்..!

இருநூறு நாட்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள்..! இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர்..!

24-11-21/10.51AM

சென்னை ; திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இருநூறு நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் முக ஸ்டாலின் என திமுகவினர் மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலினும் கூறி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வளர்ச்சிப்பணி திட்டங்கள் நகர்ப்புற வல்சி திட்டங்கள் தொழிற்பூங்கா அமைப்பு என பல்வேறு திட்டங்களையும் பல மக்கள் நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார். அதிலும் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் திட்டம் வீட்டுக்கு வீடு எரிவாயு இணைப்பு திட்டம் என மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

`

ஆனால் இந்த திட்டங்களெல்லாம் மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்தது. அதில் தங்கள் பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்கிற விஷயத்தை மட்டும் மக்களிடத்தில் சொல்ல மறந்துவிட்டார். அதிலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல முதலீட்டு திட்டங்களை புதிதாக பெயர் சூட்டி அதற்க்கு விழாவும் எடுத்தது திமுக அரசு.

```
```

இந்நிலையில் JSW நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு முதலீட்டை ஈர்த்ததாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால் இந்த முதலீட்டு ஒப்பந்தம் சென்ற வருடம் அக்டோபர் மாதமே போடப்பட்டு இந்த வருடம் ஜனவரியில் சென்னையில் இடமும் ஒதுக்கப்படவிட்டது என்பதை திமுக அரசு சொல்ல மறந்துவிட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறோம். இதோடு சேர்த்து ஸ்டிக்கர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

…..உங்கள் பீமா