Thursday, June 20, 2024
Home > அரசியல் > யோகியுடன் கைகோர்த்த அமித்ஷா..!வேட்பாளரை களம் இறக்க தயங்கும் எதிர்க்கட்சிகள்..?

யோகியுடன் கைகோர்த்த அமித்ஷா..!வேட்பாளரை களம் இறக்க தயங்கும் எதிர்க்கட்சிகள்..?

5-2-22/12.50pm

கோரக்பூர் : உத்திரபிரதேசத்தில் வருகிற 10 பிப்ரவரி முதல் தேர்தல் ஆரம்பமாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் மனுத்தாக்கலை தொடங்கியுள்ளனர். கோரக்பூர் தொகுதியில் ஐந்துமுறை எம்பியாக இருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தமுறை இங்கிருந்து போட்டியிடுகிறார்.

கோரக்பூரில் முதல்வர் யோகியை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தங்கள்வேட்பாளர்களை நிறுத்த தயக்கம் காட்டி வருகின்றன. சம்ஜவாடி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் வேறு தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். முதல்வர் யோகியை எதிர்த்து பீம் ஆர்மியை சேர்ந்த சந்திரசேகர் ஆசாத் என அழைக்கப்படும் ராவண் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற யோகியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனிருந்தார். தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்னர் பொதுமக்களிடம் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் “உத்திரப்பிரதேசத்தை மாபியாக்களிடம் இருந்து ஆதித்யநாத் விடுவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என நான் பெருமையாக கூறமுடியும்.

`

பிரதமர் மோடி மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கினார். அதிக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மாநிலம் வேறு எதுவுமல்ல. உத்திரப்பிரதேசம்தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். யோகிஜியின் தலைமையில் உத்திரபிரதேசம் கோரோனோவுக்கு எதிராக திறம்பட போராடியுள்ளது” என மக்களிடம் உரையாற்றினார்.

```
```

இந்த தொகுதியில் யோகியின் வெற்றி வாய்ப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் சமாஜ்வாடி தனது வேட்பாளரை அறிவிக்க தயக்கம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவ் தனது ஆதரவாளர்கள் நிறைந்திருக்கும் கிழக்கு உ.பி கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா