Friday, April 19, 2024
Home > அரசியல் > அடுத்தடுத்து காலியான ஆறு விக்கெட்டுகள்..! திணறுகிறதா பிஜேபி..! வெளியான திடுக்கிடும் உண்மைகள்

அடுத்தடுத்து காலியான ஆறு விக்கெட்டுகள்..! திணறுகிறதா பிஜேபி..! வெளியான திடுக்கிடும் உண்மைகள்

13-1-22/12.40pm

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பிஜேபி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது பிஜேபி தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டுபண்ணியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மவுரியா தனது ராஜினாமாவை அறிவித்த கையோடு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். அதோடு தனது ஆதரவாளர்களையும் அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று தில்கர் சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் லால் ராஜினாமா செய்ததோடு அகிலேஷுடன் கைகோர்த்தார்.

brijesh

மேலும் அதிரடியாக நேற்று மாநில வனத்துறை அமைச்சரான சௌஹான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பிஜேபிக்கு குடைச்சலை கொடுத்த நிலையில் அடுத்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது உத்திரபிரதேச அரசியலில் பூகம்பத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த தொடர் ராஜினாமாக்கள் குறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

`

நேற்று திந்தவாரி சட்டமன்ற உறுப்பினரான பிரிஜேஷ் ப்ரஜாவாதி கான்பூர் நகர் பில்ஹார் சட்டமன்ற உறுப்பினரான பகவாடி பிரசாத் சாகர் மற்றும் பிதுனா சட்டமன்ற உறுப்பினர் வினய் சாக்யா ஆகியோர் ராஜினாமா செய்து உத்திரபிரதேச அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளனர். இதில் ராஜினாமா செய்த நான்கு பேர் அகிலேஷ் கட்சியிலிருந்து விலகி பிஜேபியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

roshan

ராஜினாமா செய்தவர்கள் ஒருமித்த குரலில் தனித்தனியாக சொல்லும் காரணம் அனைவரையும் இது டூல்கிட் என சந்தேகம் கொள்ளவைத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் யோகி அரசு தலித்துகளுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகவும் ஓபிசி க்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பேட்டியளித்துள்ளனர். மேலும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில்,

```
```
vinay sakya
chauhan minister

” யோகி மிகவும் அதிரடியாக செயல்படுவதோடு ஊழலில் சொந்த கட்சியினர் ஈடுப்பட நினைத்தாலே கடும் நடவடிக்கைகள் பாரபட்சமின்றி பாயும் என எச்சரித்துள்ளார். மேலும் அவரது நிர்வாகத்தில் ஊழல் எனும் பேச்சுக்கே இடமில்லாததால் வருமானம் பார்க்க வழியில்லாதவர்கள் விலகி செல்கின்றனர். மக்கள் அனைவரும் முதல்வர் யோகியின் பக்கமே நிற்கிறார்கள். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை” என கூறுகின்றனர்.

ஆனாலும் இந்த கடைசிநேர கட்சித்தாவல் தேர்தல்முடிவுகளில் சிறு சறுக்கலையாவது வெளிப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிஜேபி தலைமையோ ஆதித்யநாத்தோ இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஆனந்த்சிங் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

anand sing

……உங்கள் பீமா