Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > பத்மஸ்ரீ கங்கனா ரணாவத்..! காங்கிரஸ் ஐடி விங் செயலாளருக்கு ஆப்பு..!

பத்மஸ்ரீ கங்கனா ரணாவத்..! காங்கிரஸ் ஐடி விங் செயலாளருக்கு ஆப்பு..!

24-11-21/11.44am

பீகார் : பத்மஸ்ரீ கங்கனா ரணாவத் குறித்து ஆபாசமாக பேசிய ஐடி விங் மாநில செயலாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு வேண்டப்படாதவர்கள் அல்லது அரசியல் எதிரிகள் ஆகியோரை கட்டம் கட்டுவது வழக்கம். அதுவும் திமுக பாணியில் தனிமனித தாக்குதல் தொடுப்பதில் திமுகவின் தோழமை கட்சிகள் எப்போதும் பாரபட்சமோ கருணையே பார்ப்பதில்லை.

ஆர்யன் கான் வழக்கில் ஆர்யனை நேரடியாக கைது செய்த உயர் அதிகாரி சமீர் மீது காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் தனி மனித தாக்குதல் தொடுத்தன. ஒரு கட்டத்தில் எல்லை மீறி அவரது பிறப்பு பற்றியும் சந்தேகங்களை கிளப்பின. அந்த கருதுக்கெல்லாம் வழக்கு பதியாத காவல்துறை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்தை கூறிய அதே நாளில் படு வேகமாக கங்கனா மீது வழக்கு பதிந்தது.

`

அதே போல அமேசான் நிறுவனம் இந்துக்களுக்கு எதிரான விளம்பரத்தை வெளியிட்டபோது அந்த நிறுவனத்தை காப்பாற்ற நூற்றுக்கணக்கான போலீசார் மும்பையில் குவிக்கப்பட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களை விரட்டினர். ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கருத்து கூறினார் என கங்கானாவின் மும்பை அலுவலகம் நகராட்சி நிர்வாகத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

```
```

இந்நிலையில் பத்மஸ்ரீ கங்கனா குறித்து ஆபாசமாக பதிவிட்ட பிஹார் மாநில காங்கிரஸ் ஐடி விங் மாநில செயலாளர் வினய் ஓஜா மீது பாட்னாவில் நேற்று எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இனி கண்ணியமற்ற முறையில் பேசும் காங்கிரசார் மற்றும் அதன் தோழமைகளுக்கு இது எச்சரிக்கை மணி என பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா