4-5-22/13.48PM
பெங்களுர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் பயணமாக கர்நாடகா வந்தடைந்துள்ளார். பிஜேபி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சந்திப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவதோடு தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிஜேபி தலைவரான பி.எல்.சந்தோஷ் தலைமை மாற்றம் இருக்கும் என்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக நான் திறமையானவன் என்று மக்கள் நினைக்கிறார்கள், எனது செயல்பாடுகளை மக்கள் பாராட்டுகிறார்கள். அவர்கள் மட்டுமே மதிப்பீடு செய்ய தகுதியானவர்கள் என்ற ரீதியில் சூசகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அமித்ஷாவின் கர்நாடக விஜயம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியிருந்தது. இதனிடையே நேற்று மக்களிடம் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பெரும் வளர்ச்சி குறித்து பேசியிருந்தார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மத்திய உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு பிஜேபி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் பெங்களூருவில் இருந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்,எல்சிக்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மாநில அமைச்சர்கள் கோவிந்த் காரஜோல் ஸ்ரீராமுலு. கல்விதுறையமைச்சர் நாகேஷ் சோமண்ணா, கோபாலய்யா மற்றும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பசவராஜ், சித்தேஸ்வர், சதானந்த கவுடா மற்றும் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனால் கர்நாடக பிஜேபியில் உட்கட்சி பூசல் இருக்கலாம் என்கிற யூகம் உண்மையாகிப்போனதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர். மேலும் லிங்காயத்துகளின் ஆதரவிலேயே பசவராஜ் பொம்மை முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா