கடந்த ஆகஸ்ட் 2 திரிணாமூல் காங்கிரசின் தலைவரும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி எம்பி திரிபுரா சென்றார். அங்கு அகர்தலாவில் உள்ள திரிபுரேஸ்வரி அம்மன் கோவில் செல்லும் வழியில் எம்பியின் கார் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து இன்று திரிணாமூல் காங்கிரஸ் தலைமை திரிபுரா டிஜிபிக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில் “திரிணாமூல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் கார் சில சமூக விரோத சக்திகளால் கம்பு மற்றும் கொண்டு தாக்கப்பட்டிருக்கிறது. இது அபிஷேக் பானர்ஜியை கொல்லும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதாக தெரிகிறது. அவரது பாதுகாவலர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இது திரிபுரா மாநில பிஜேபியின் திட்டமிட்ட செயலாக தெரிகிறது. ஆகவே எம்பியை தாக்க முற்பட்டவர்களை விசாரித்து வழக்கு பதிய வேண்டும்.” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் பிரஷாந்த் கிஷோர் தனது குழுவினருடன் திரிபுரா சென்றிருந்தார். அங்கு அவர் கோவிட் விதிமுறைகளை பின்பற்றாததால் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தி இரண்டு நாட்கள் ஹோட்டலிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டார் . ஆனால் இந்த தகவலை பானர்ஜி திரித்து கூறி அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக கூறினார்.
பிரசாந்த் கிஷோர் திரிபுரா சென்ற இரு தினங்களிலேயே அபிஷேக்கும் சென்றிருக்கிறார். இருவரும் சேர்ந்து மாநிலத்தின் அமைதியை குலைத்து மேற்கு வங்கம் போல் மாற்ற முயற்சிப்பதாக பிஜேபி தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
…உங்கள் பீமா