4-3-22/10.42am
சென்னை : திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆளுமை மிக்கவர் என்பதில் துளி சந்தேகமில்லை. கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதுகுறித்த விழிப்புணர்ச்சியோ அல்லது போராட்டமோ நடைபெறாவண்ணம் தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
சென்னை பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகள் ஆயிரக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டபோது அதன் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொண்டது மட்டுமன்றி சென்னையில் பல குடியிருப்புகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டபோதும் மக்களை போராடாமல் பார்த்துக்கொண்டது அல்லது ஊடகத்தில் வராமல் பார்த்துக்கொண்டது போன்ற அடிப்படை விஷயங்களை கையாண்டதன் மூலம் தான் ஒரு ஆளுமை என முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

இதனிடையே அப்துல் கலாம் எனும் சிறுவனை பேசவிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் அந்த சிறுவனுக்கு இல்லத்தை வழங்கி தான் ஒரு ஆளுமை மிக்க முதல்வர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவித்துள்ளார். மேலும் அந்த சிறுவன் ஹே சினாமிகா எனும் திரைப்படத்தில் துணை நடிகராக நடிக்கும்போது அந்த சிறுவனிடம் பேசி வீடியோ எடுத்து அதை வெளியிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
உக்ரைன் மாணவர் மீட்புக்குழு முதல் நீட் தேர்வு ரத்து வரை அறிக்கை விட்டு அதற்கென தனி குழு ஒன்றை உருவாக்கி தான் ஒரு ஆளுமை மிக்க மாபெரும் தலைவர் என இந்த தமிழ் சமூகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
…..உங்கள் பீமா
