Friday, March 29, 2024
Home > ஆன்மிகம் > ஆஞ்சநேயன் அருள் கிட்ட…!

ஆஞ்சநேயன் அருள் கிட்ட…!

ஆஞ்சநேயர் சீரஞ்சீவி. நம்மில் ஒருவராக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். கடவுளை வணக்க நேரம் எனக்கு இல்லை நான் வேலைக்கு போகிறேன் என்று நிறைய பேர் சொல்லுவது உண்டு. நீங்கள் ஆடம்பரமாக பூஜை செய்ய வேண்டாம். ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் என்று உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள்.ஸ்ரீ ராமர் என்றால் ஆஞ்சநேயருக்கு மிகவும் விருப்பம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.உங்களால் எவ்வளவு முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள். ஸ்ரீராம் என்று சொன்னவுடன் ஆஞ்சநேயர் நம் கவலைகளை போக்க ஓடோடி வருவார்.

இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் மட்டும் போதும்.இந்த உலகத்தையும் நம் கைக்குள் கொண்டு வரலாம்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.

வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.

`

தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.

அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.

அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.

அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.

```
```

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.

துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.

ஸ்ரீ ராம் என்று சொல்லுங்கள் முடிந்தால் இந்த சின்ன ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி பலன் பெறுங்கள்.

*அனைத்து *காரியங்களிலும்*

*வெற்றி உண்டாக*

ஸ்ரீராம தூத மஹாதீர

ருத்ரவீர்ய ஸமத் பவ

ஆஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத

வாயு புத்ர நமோஸ்துதே.

ஆஞ்சநேயரை வணங்கி அவர் அருளை அனைவரும் பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.நிச்சயம் அவர் அருளால் நாம் எல்லோரும் நன்றாக இருப்போம்.

*ஜெய் ஸ்ரீ ராம்*