தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரின் உடன் பிறந்த சகோதரர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கெங்குரெட்டி சாலையில் மதுபான கூடம் நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக நீண்ட நேரம் மதுபான கூடத்தை திறந்து வைத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து காவல் துறை அங்கு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது,
இதையடுத்து கீழ்பாக்கம் காவல் துணை ஆணையரை அமைச்சர் சேகர்பாபுவின் உதவியாளர் என கூறிக்கொள்ளும் ஒருவர் அலைபேசியில் தரக்குறைவாக பேசி மிரட்டும் ஆடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
`
சம்பந்தப்பட்ட அமைச்சர் இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து மேல்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
``````
…உங்கள் பீமா