6-3-22/16.49pm
மதுரை : கடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதாக ஜெயா டிவி செய்து வெளியிட்டிருந்தது. அதேபோல சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பல தில்லுமுல்லு வேலைகளில் திமுக ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி 10 ஆவது வார்டை சேர்ந்த பிஜேபி வேட்பாளர் ஸ்ரீமதி பழனிசெல்வி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியர் திமுக வெற்றபெற்றதாக சான்றிதழ் வழங்கியுள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார் வேட்பாளர் ஸ்ரீமதி. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிஜேபி வேட்பாளர் 284 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஜேபி தலைவர்களுள் ஒருவரான வினோஜ் பி.செல்வம் தனது அறிக்கையில் “இன்று மதுரை மாவட்டம் T கல்லுப்பட்டி 10 ward ஸ்ரீமதி பழனிசெல்வியுடன் பேசினேன். தேர்தல் முடிவுகளில் வெற்றி பெற்றிருந்தாலும், திமுக கமிஷன் வழக்கம் போல் திமுக வேட்பாளர் வெற்றி என அறிவித்துவிட்டது.
மனம் தளராத சகோதரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதிபதிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை CCTV பதிவுகள் திரையிடப்பட்டு, நீதிமன்றத்தின் மூலமாக தன் வெற்றியை 10 நாட்களில் மீட்டெடுத்திருக்கிறார்.
உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை மாவட்ட ஆட்சியரை தான் முதலில் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் .இதுபோன்றுதான் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வெற்றி பெற்று இருப்பார்கள் என்ற சந்தேகம் இந்த வழக்கை பார்த்த பிறகு வலுவாக எழுகிறது.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பத்து நாட்களில் தீர்த்து வைக்கப்பட்டதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா