Tuesday, October 15, 2024
Home > ஆன்மிகம் > வந்த வழி மறந்துபோச்சே..! திருடர்களை திண்டாடவிடும் மிருதங்க சைலேஸ்வரி ஆலயம்..!

வந்த வழி மறந்துபோச்சே..! திருடர்களை திண்டாடவிடும் மிருதங்க சைலேஸ்வரி ஆலயம்..!

கேரளா : இந்தியாவில் அவதாரங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் கேரளா மற்றும் தமிழகத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. அதனால் தான் கேரளா கடவுளின் பூமி எனவும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இந்திய மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இறைமறுப்பாளர்கள் போர்வையில் ஹிந்துமத வெறுப்பாளர்களின் சிற்றறிவுக்கு புலப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத பல அறிவியல்பூர்வ உண்மைகள் கோவில்களுக்குள் மறைந்து கிடக்கிறது.



இதற்கேற்றாற்போல கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள மதிப்புமிக்க சிலையை திருடும் திருடர்கள் சிறிது தூரம் தள்ளிகொண்டுபோய் வைத்துவிட்டு ஓடிவிடுகின்றனர். அவர்களால் சிலையை மேற்கொண்டு கொண்டுசெல்லமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுகுறித்து முன்னாள் கேரள டிஜிபி அலெக்ஸாண்டர் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கிராமமான முழக்குன்னுவில் அமைந்துள்ளது மிருதங்க ஷைலேஸ்வரி ஆலயம். கடவுளின் அவதாரமான பரசுராமர் எழுப்பிய 108 திருத்தலங்களில் இதுவும் ஒன்று என்பது சிறப்பு. இந்தக்கோவிலின் பெயர்வரலாறு ஒரு தனி புராணம். பரசுராமர் காலத்தில் மிருதங்க வடிவிலான ஒரு பாறை சொர்க்கத்திலிருந்து இந்த பகுதியில் விழுந்தது.

`

அதைக்கண்ட அவதாரம் பரசுராமர் அதில் தேவியின் இருப்பை உணர்ந்தார். தனது தவ வலிமையால் அந்த பாறைக்குள் வரவழைத்த பரசுராமர் தேவியை பாறைக்குள் நிறுத்தி அதை சுற்றி ஆலயம் எழுப்பினார். மேலும் இந்த சைலேஷ்வரி தேவியை வணங்குபவருக்கு அனைத்து தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த திருத்தலத்திலேயே கதகளி நடனம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற கேரள டிஜிபி அலெக்ஸாண்டர் கூறுகையில் ” இந்த மிருதங்க ஷைலேஸ்வரி ஆலயத்தில் உள்ள பஞ்சலோக சிலையின் மதிப்பு கள்ளச்சந்தையில் இரண்டுகோடி ரூபாய். இந்த கோவிலுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை. அதனால் இந்த சிலையை திருட நான்குமுறை முயற்சிகள் நடந்தது. முதல்முறை யஹிருடிய திருடர்கள் சரியாக பாறைக்கடவு என்ற இடத்தில் சாலையோரமாக வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

```
```

அந்த சிலை இருந்த இடத்தின் அருகே மலம் கழித்தும் சிறுநீர் கழித்தும் சென்றுள்ளனர். அதேபோல மற்றொருமுறை நான்கு திருடர்கள் சிலையை திருடமுயன்று முன்னூறு மீட்டர் தொலைவிலேயே சிலையை விட்டுச்சென்றுள்ளனர். முன்னவர்கள் போலேயே மலம் கழித்தும் சிறுநீர் கழித்தும் சென்றதோடு அவர்களைப்போலவே குறிப்பும் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

அடுத்த சிலமாதங்களிலேயே சில திருடர்கள் கல்பேட்டா வரை கொண்டுசென்றனர். ஆனால் அவர்களும் முந்தய திருடர்கள் போலவே குறிப்பு எழுதிவிட்டு மலம்கழித்து சிறுநீர் கழித்தும் சென்றுள்ளனர். மேலும் சில திருடர்கள் கோவில்வளாகத்திலேயே சிலையை விட்டு சென்றதோடு அவர்களைப்போல குறிப்பும் எழுதிச்சென்றுள்ளனர்.



எல்லா திருடர்களும் எழுதிய குறிப்பில் ஒரே மாதிரி எழுதியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ” எங்களால் இதற்குமேல் கொண்டுசெல்ல முடியவில்லை. நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் வயிற்றில் உபாதை ஏற்படுகிறது. திசை வேறு மறக்கிறது” என சொல்லிவைத்தாற்போல அனைவரும் எழுதியுள்ளனர்” என டிஜிபி குறிப்பிட்டார்.

 Alexander Jacob, IPS (Retd)

இதுகுறித்து மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோவில் நம்பூதிரிகள் கூறுகையில் ” இது நீண்டகால செயல். இந்த சிலை பிரதிர்ஷ்ட கர்மா ” என குறிப்பிட்டனர். ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் சிலையை திருடிய திருடர்கள் தங்களுக்கு பயங்கர கனவுகள் வருவதாக கூறி கோவில்நிர்வாகத்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.