Sunday, January 26, 2025
Home > செய்திகள் > ஒட்டுக்கும் டோக்கன் நிவாரணத்துக்கும் டோக்கனா..❓

ஒட்டுக்கும் டோக்கன் நிவாரணத்துக்கும் டோக்கனா..❓

13-11-21/ 19.40pm

திருச்சி : TTV ஸ்டைலில் டோக்கன் கொடுத்து மக்களை திமுக அமைச்சர் ஏமாற்றிவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கேஎன் நேரு வெள்ளநிவாரணப்பொருட்கள் வழங்குவதாக கூறி டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.

அந்த டோக்கனில் அமைச்சர் பெயர் மற்றும் விலாசத்துடன் ரப்பர் ஸ்டாம்ப்பால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. மேலும் அதில் வரிசை எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டோக்கனை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் பலர் வரிசையில் நின்றுள்ளனர். இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் நிவாரண பொருட்களோ அதை கொடுக்க திமுகவினரோ வரவில்லை என தெரிகிறது.

`

அதையடுத்து பொதுமக்கள் தங்கள் இயலாமையை வெளிக்காட்டினர். எங்களுக்கு வேற்று காகிதத்தில் எழுதி கொடுத்து ஏமாற்றிவிட்டனர். வாக்கு சேகரிக்க வரும்போது இருந்த பணிவும் செயலும் இப்போது இல்லை என வருத்தம் தெரிவித்தனர். திமுக தரப்பில் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்க மறுத்துவிட்டனர்.

```
```

திமுக ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் அவர்களது சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது என திருச்சிநகர பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் இது போன்ற விரும்பத்தகாத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

……உங்கள் பீமா