Friday, March 29, 2024
Home > செய்திகள் > பிஜேபி நிர்வாகி படுகொலை..! முழுப்பின்னணி..!

பிஜேபி நிர்வாகி படுகொலை..! முழுப்பின்னணி..!

சென்னை : கடந்த 20 நாட்களில் 19 கொலைகள் அரங்கேறியிருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் வேளையில் தமிழக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு தவறிவிட்டது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று பிஜேபி நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது.


தமிழக பிஜேபியின் எஸ்சி பிரிவு மத்திய சென்னை பிரிவின் தலைவராக இருந்தவர் பாலசந்தர். இவர் மத்திய இணையமைச்சரான எல்.முருகனின் தீவிர ஆதரவாளர். இவருக்கு கடந்த சிலமாதங்களாக தொலைபேசியில் கொலைமிரட்டல் விடப்பட்டு வந்தது. இதனால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் காவலுக்கு நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நண்பகலில் தனது பாதுகாவலர் பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் உள்ள நித்யா இரும்புக்கடை அருகே நின்று தனது சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாதுகாவலர் பாலகிருஷ்ணன் எதிரில் உள்ள தேநீர் கடைக்கு சென்றார்.

`

அதைக்கவனித்த 3-4 பேர்கொண்ட மர்மக்கும்பல் ஒன்று கத்தி அரிவாள் உள்ளிட்ட கொலை ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர். திடீரென தாக்குதல் தொடுக்கப்பட்டதால் அவர்களை தள்ளிவிட்டு பாலசந்தர் ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுற்றிவளைத்து அவரை கடுமையாக கூறிய ஆயுதங்களால் தாக்கியது. இதில் நிலைகுலைந்த பாலசந்தர் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து துடிதுடிக்க அகால மரணமடைந்தார்.


பாலச்சந்தர் உயிருக்கு பயந்து அலறி ஓடுகையில் அந்த பகுதி மக்களும் அலறியடித்து ஓடினரே தவிர யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. பாலச்சந்தருடன் சிலருக்கு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பாலசந்தரின் சகோதரி ஷர்மிளா கூறிய தகவல் அடிப்படையிலும் அவரின் புகார் அடிப்படையிலும் பிரபல ரவுடிகளால் பிரதீப் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் மற்றும் மற்றொரு ரவுடி கலைவாணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

```
```

மூவரும் தப்பியோடிய நிலையில் போலீசார் தீவிரமாக தேடிவருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த மூன்று ரவுடிகளின் வாக்குமூலத்தை பொறுத்தே உண்மையான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. அதுவரை எந்த ஒரு வதந்தியையும் பரப்பவேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.