Monday, November 11, 2024
Home > செய்திகள் > சாதுவை தாக்கிய கொடூரன்..! அடுத்து நடந்த மேஜிக்..!

சாதுவை தாக்கிய கொடூரன்..! அடுத்து நடந்த மேஜிக்..!

மத்தியபிரதேசம்: ஆன்மீகவாதிகளோ பக்தர்களோ இறைநம்பிக்கை கொண்டவர்களோ இறைமறுப்பாளர்கள் என கூறிக்கொண்டு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே கொச்சைப்படுத்துபவர்களை தாக்குவதில்லை. ஆனால் இறைமறுப்பாளர்கள் என கூறிக்கொள்ளும் பலர் ஆன்மீகவாதிகளையும் சாதுக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவதும் தாக்குவதும் அநாகரிகமான முறையில் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.



மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் இரு சாதுக்கள் வங்காளதேச கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டனர். அந்த வழக்கு நீதிபதிகளின் போதிய நேரமின்மையால் இன்னும் நிலுவையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது ( ஆனால் ராணா அய்யூப் போன்ற பிரபலங்கள் கொடுக்கும் மனு 24 மணிநேரத்தில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என்பது தனிக்கதை). இப்படி இந்தியா முழுவதும் சாதுக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் வேலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு சாது தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

`

NDTV வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் ” கடந்த ஞாயிறன்று மத்தியபிரதேசம் கந்த்வா பகுதியில் உள்ள சந்தையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சாது ஒருவர் அமைதியான முறையில் யாசகம் செய்துவந்துள்ளார். அந்த சாதுவுடன் பிரவின் கவுர் எனும் உணவக உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும் அந்த அப்பாவி சாதுவை கொடுமையாக தாக்கி ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். பின்னர் அருகிலிருந்த முடிதிருத்தும் கடைக்கு சாதுவை இழுத்துச்சென்ற பிரவின் கவுர் சாதுவை பலவந்தப்படுத்தி தலையை மொட்டையடித்துள்ளார். இந்த சம்பவங்களை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.


```
```

அதைத்தொடர்ந்து கல்வா காவல்நிலையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து பிரவீன் கவுரை கைதுசெய்துள்ளதாக தெரிகிறது. மேலும் சாதுவை தாக்கி மொட்டையடிக்கும்போது பொதுமக்கள் கூட ஆரம்பித்தனர். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. மக்கள் கூடியதும் திடீரென அந்த சாது மாயமானது பொதுமக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.