Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > ஏன் இந்த மதவெறி..!? இஸ்லாமிய பெண்ணை காதலித்தவருக்கு நேர்ந்த கதி..!

ஏன் இந்த மதவெறி..!? இஸ்லாமிய பெண்ணை காதலித்தவருக்கு நேர்ந்த கதி..!

கர்நாடகா : கர்நாடகாவில் கடந்த மாதம் இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் நாகராஜ் தனது மனைவி பானு என்ற அந்த பெண்ணின் குடும்பத்தினரால் பொதுமக்கள் முன்னிலையில் இரும்புக்கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்டார். தலித் இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் மதம் மாற வற்பறுத்தியும் அவர் மாறாததால் கொல்லப்பட்டார் என செய்திகள் தெரிவித்திருந்தன.



அதேபோல இன்ஸ்டாகிராமில் பழகி ஆசையை தீர்த்துக்கொண்ட கோயம்புத்தூர் இளைஞர் கரூர் பெண்ணை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்த அந்த இளம்பெண் மறுக்கவும் அவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியில் விடுவதாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடகாவில் இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்த இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் படுகொலை செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

`

கர்நாடக மாநிலம் வாடிநகர் பீமாநகர் லே அவுட்டில் வசிப்பவர் விஜயா காம்ப்ளெ. இவர் அதேபகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை இஸ்லாமிய பெண்ணின் வீட்டார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சில உண்மைகள் வெளிவந்தன.

vijaya kamble Karnataka

```
```

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் “சம்பவத்தன்று விஜயா காம்ப்ளெ இருப்புப்பாதை அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இருநபர்கள் கூரிய ஆயுதத்தால் சராமரியாக வெட்டியுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே விஜயா துடிதுடித்து இறந்துள்ளார். மேலும் அந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

கொல்லப்பட்டவரின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் இஸ்லாமிய பெண்வீட்டினர் நேரடியாக வந்து மிரட்டியதாகவும் கொலைசெய்யபோவதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்தது பெண்ணின் சகோதரனான ஷஹாபுதீன் (19) என தெரியவந்துள்ளது. அவருடன் நவாஸ் என்பவரும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.



இந்த இருவரையும் காவல்துறை கைதுசெய்துள்ளது” என குறிப்பிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலபுர்கி மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நிலைமை மோசமாகாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.