21–11-21/14.01pm
தஞ்சாவூர் : திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் மெத்தன போக்கால் தஞ்சை பெருவுடையார் கோவில் தெருநாய்களின் கூடாரமாக மாறிவருகிறது.
கோவில் விதிமுறைகளை நாகரிக முன்னேற்றம் கருதி மாற்றிவிட இயலாது. எத்தனை காலம் ஆனாலும் அம்மாவையம் அப்பாவையும் பெயர் மாற்றி கூற இயலாது. இது இயற்கையின் நியதி. இதை புரிந்து கொண்டோரே கோவில் ஆகம விதியை புரிந்து கொள்ள சித்த தெளிவு பெற்றவர்.
கோவில்களின் நாய்கள் நுழைந்தால் தவறில்லை என கூறும் இடது சாரி சிந்தனையாளர்கள் நாய் பூனை போன்ற பிராணிகளை கவனிக்க தனியாக முனிசிபாலிட்டி ஒன்று இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர் பண்பாட்டை தாங்கி நிற்கும் தமிழக கோவில்களுக்கென ஆகம விதிகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது.
கோவில் விதிமுறைகளை நாகரிக முன்னேற்றம் கருதி மாற்றிவிட இயலாது. எத்தனை காலம் ஆனாலும் அம்மாவையம் அப்பாவையும் பெயர் மாற்றி கூற இயலாது. இது இயற்கையின் நியதி. இதை புரிந்து கொண்டோரே கோவில் ஆகம விதியை புரிந்து கொள்ள சித்த தெளிவு பெற்றவர்.
திமுக அதிமுக என தமிழனை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களின் கோவில் சொத்தை சுரண்டியதில் பாகுபாடில்லாமல் செயல்பட்டிருக்கின்றனர். அறநிலையத்துறை திமுக அமைச்சர் கோவில்கள் கடந்த ஆட்சியை விட சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். மேலும் பல கோவில்களில் புனரமைப்பு பனி மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் நிஜ நிலவரம் அப்படி இருப்பதாக தெரியவில்லை. உலகப்புகழ் பெற்ற தமிழனின் பெருமையை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவது பக்தர்களை பயம் கொள்ளச்செய்திருக்கிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
தெருநாய்களால் ஏற்படும் நோய்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு தொற்றிவிடுமோ என தஞ்சை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா