Wednesday, May 25, 2022
Home > ஆன்மிகம் > திருமேனி விக்ரகங்கள் சிறையிலா..? ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் ஆவேசம்..!

திருமேனி விக்ரகங்கள் சிறையிலா..? ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் ஆவேசம்..!

21-3-22/10.15AM

கோயம்புத்தூர் : தெய்வ திருமேனி விக்ரகங்கள் சிறையில் சிறைப்பட்டு கிடப்பதை அனுமதிக்க கூடாது. விக்ரகங்களை கோவிலில் வைத்து பூஜை செய்யவேண்டும் என ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

நேற்று அவிநாசி அருகே உள்ள பழங்கரையில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் ” இறைவனிடத்தில் இருந்து விபூதியை வாங்குவது மட்டுமல்லாமல் மனதார சமய தலைவர்களை மதிக்க வேண்டும்.

60 வயதை கடந்த பிறகு வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்களித்த வரம். அந்த வரத்தை இறைவனுக்கே நாம் அர்ப்பணிக்க வேண்டும். இறைவனின் திருமேனிகளை சிலை என சொல்ல கூடாது. விக்ரகம் என சொல்லப்பழக வேண்டும், கோவில் அலுவலர்கள் கால பூஜைகளிலெல்லாம் தலையிட கூடாது. முறைகேடு நடைபெறாமல் பாத்துக்கொள்வதே அவர்கள் பணி.

சென்னை மியூசியம் விக்ரக பாதுகாப்பகம் கருவூலம் ஆகியவற்றில் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருக்கும் விக்ரகங்களை கோவிலில் வைத்து பூஜை செய்யவேண்டும். கோவிலில் உள்ள தெய்வத்திருமேனிகளை பாதுகாப்பதில் அடியார்கள் மற்றும் பெருமக்களுக்கு பங்கு உண்டு. விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்காக நாம் பாதுகாக்க வேண்டும்” என கூறினார்.

…..உங்கள் பீமா

Leave a Reply

Your email address will not be published.

விளம்பரம்





This will close in 20 seconds

error: Content is Protected! © The Madras Telegram