Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > ஜெயிலிலாவது மட்டன் கிடைக்கும்..! கொலைக்குற்றவாளி ஹமீது பகீர்..!

ஜெயிலிலாவது மட்டன் கிடைக்கும்..! கொலைக்குற்றவாளி ஹமீது பகீர்..!

20-3-22/12.03PM

கேரளா : ஜெயிலிலாவது வாரம் ஒருமுறை மட்டன் கிடைக்கும். ஆனால் வீட்டில் கிடைக்காது என கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹமீது போலீசாரிடம் தெரிவித்தது பரபரப்பை கூட்டியிருக்கிறது.

தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ஹமீது. இவருக்கு பைசல் என்ற மகன் உள்ளார். ஹமீது தனது மகன் மருமகள் பேரனுடன் வசித்து வருகிறார். ஹமீது தனக்கு இறைச்சி மற்றும் மீன் தினமும் மூன்றுவேளை சாப்பிட வேண்டும் என தனது மகனிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் தொடுபுழா முனிசீப் கோர்ட்டில் தனது வீட்டை மகனிடம் இருந்து மீட்டுத்தருமாறு வழக்கும் தொடுத்திருக்கிறார்.

அதையடுத்து பிப்ரவரி 25 அன்று மகன் பைசல் பெட்ரோலை ஊற்றி தன்னையும் தனது குடும்பத்தையும் தனது அப்பா ஹமீது கொல்லப்போவதாக மிரட்டல் விடுப்பதாக கரிமண்ணூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவத்தையடுத்து சனிக்கிழமை 12.45 AM பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் சென்ற ஹமீது ஜன்னல் வழியே தூங்கிக்கொண்டிருந்த மகன் மற்றும் மருமகள் பேரக்குழந்தை ஆகியோர் மீது வீசியுள்ளார்.

`

பின்னர் அதை பற்றவைத்துள்ளார். மேலும் வீட்டின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் 11ஆம் வகுப்பு பயின்றுவந்த மெஹ்ரின் எட்டாம் வகுப்பு பயின்றுவந்த அஸ்னா மற்றும் மருமகள் ஷீபா (45) பைசல் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் கொடுமை என்னவெனில் தீயிலிருந்து தப்பிக்க பாத்ரூம் சென்றிருக்கின்றனர். ஆனால் ஹமீது முன்னரே திட்டமிட்டு தண்ணீர் தொட்டியிலிருந்து நீரை முழுவதும் வெளியேற்றியுள்ளான்.

```
```

மேலும் பைசல் பெட்ரோல் மற்றும் டீசலை கடையில் வைத்து விற்று வந்திருக்கிறார். அங்கிருந்தே பெட்ரோலை எடுத்து தனது சொந்த குடும்பத்தை பலியிட்டிருக்கிறான் ஹமீது. இதுகுறித்து பேசிய எர்ணாகுளம் ஐஜி நீரஜ் “இது திட்டமிட்ட படுகொலை. ஹமீதுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

…..உங்கள் பீமா