21-3-22/11.23AM
கர்நாடகா : ஹிந்து கோவில் திருவிழாக்களில் கோவில் வளாகங்களில் கடை திறக்க இனி இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என கர்நாடகாவில் கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. ஹிந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்திபெற்ற மாரிக்குடி கோவில் நிர்வாகம் வருடந்தோறும் நடக்கும் கண்காட்சியில் ஹிந்து விற்பனையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதை தொடர்ந்து ஷிமோகாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவிலான கொடமாரிகாம்பா ஜாத்ராவின் ஏற்பாட்டுக்குழுவும் 23மார்ச்சிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் திருவிழாவில் ஹிந்து விற்பனையாளர்கள் மட்டுமே கடை திறக்க அனுமதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்து ஆர்வலர்கள் மற்றும் பிஜேபியினர் மற்றும் விஹெச்பி பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை எழுப்பியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோவில்நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
கோவில் நிர்வாக குழு 9.1 லட்சத்திற்கு டெண்டரை வழங்கியிருந்தது. அவர் இஸ்லாமிய மற்றும் கிறித்தவ வியாபாரிகளுக்கு கடையை ஒதுங்கியிருந்தார். ஹிந்து அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்ததால் டெண்டரை எடுத்த சிக்கண்ணா என்பவர் தனது டெண்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப தருமாறு நிர்வாகத்தை அணுகியுள்ளார். கடந்த 19 மார்ச் அன்று கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து அமைப்புக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஹிந்து அமைப்புகளின் விருப்பத்திற்கேற்ப ஹிந்து வியாபாரிகளுக்கு மட்டுமே கடை ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டது.
மேலும் பஜ்ரங் தள் உறுப்பினரான ஹர்ஷா கொல்லப்பட்டது மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடலோரபகுதியில் இஸ்லாமியர்கள் கடையடைப்பில் ஈடுபட்டது ஆகிய காரணிகளால் கோவில் நிர்வாகம் ஹிந்துக்களுக்கு மட்டுமே கடைதிறக்க அனுமதி வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
…..உங்கள் பீமா
