Saturday, June 10, 2023
Home > செய்திகள் > ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு சரமாரி வெட்டு..! SDPI வெறிச்செயலா..? திடுக்கிடும் பின்னணி..!

ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு சரமாரி வெட்டு..! SDPI வெறிச்செயலா..? திடுக்கிடும் பின்னணி..!

07-01-22/14.48pm

கம்பம் : தேனீ மாவட்டம் கம்பத்தில் பட்டப்பகலில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வெட்டப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு பிஜேபி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் விரைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கம்பம் பொறுப்பாளராக இருக்கிறார். ரவிக்குமார் கம்பம் குமுளி சாலையில் அரசு மருத்துவமனை அருகே எஞ்சின் ஆயில் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல தனது கடைக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து பின்புறமாக கொடூரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கியிருக்கின்றனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகேயுள்ள கம்பம் மருத்துவமனையில் அனுமதித்தனர். கூட்டம் வருவதை கண்ட அந்த மர்ம கும்பல் தப்பியோடியுள்ளது.

`

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்துமுன்னணி அமைப்பினர் சாலையில் போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானம் செய்து குற்றவாளிகளை விரைந்துபிடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதனிடையே தேனீ மாவட்ட எஸ்பி இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு ரவிக்குமாரை தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொலை முயற்சிக்கான திடுக்கிடும் பின்னணி வெளிவந்துள்ளது. ரவிக்குமாருக்கு சொந்தமான தோப்பு ஒன்று கம்பம் கம்பம் மெட்டு சாலையில் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் SDPI யை சேர்ந்த சிலர் அவரது தோப்பில் மாமிச கழிவுகளை வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் வந்து அதிர்ச்சிக்குள்ளான அவர் மீண்டும் அவர்கள் அடுத்த நாள் வரும்போது கையும் களவுமாக பிடித்துள்ளார். அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளார்.

மாமிச கழிவை வீசிய அவர்களை போலீசார் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர். அவர்களின் வாகனத்திற்கும் அபராதம் விதித்துள்ளனர். அடுத்த நாளிலேயே ஜாமீனில் வெளிவந்த அவர்களில் ஒருவர் ரவிகுமாரிடம் நான்கு நாட்களுக்குள் என்ன நடக்க போகிறது பார் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே ரவிக்குமார் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் பின்னணியில் SDPI அமைப்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

…….உங்கள் பீமா