Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > ஷாக்..! 20000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் திமுக..!

ஷாக்..! 20000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் திமுக..!

19-4-22/11.04AM

சென்னை : நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான பல நடவடிக்கைகளை நிர்வகிக்க தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் முகாமை என்ற ஒரு அரசு சார் நிறுவனத்தை உருவாக்கி தமிழ்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசுகள் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக திமுக அரசு 20000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை திறம்பட நிர்வகிக்க (LAATAAN) தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் முகமை என்ற நிறுவனத்தை உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் முதன்மைச்செயலர் தலைவராகவும் தொழில்கள்,நீர்வளம்,நெடுஞ்சாலைகள் மற்றும் நிதித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் முகமையின் செயல்பாட்டை மேற்பார்வையிடவும் அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு வழிகாட்டுதல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் பதவிவகிப்பார்.

சென்னை பெரிபெரல் ரிங் ரோடு,சென்னை வெளிவட்டச்சாலை, சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திட்டம், பல்வேறு நகரங்களுக்கு நான்குவழிச்சாலை, பாலங்கள் மேல் மற்றும் பாலங்களுக்கு அடியில் சாலை மற்றும் திருவண்ணாமலை,ஓசூர், திருநெல்வேலி,தூத்துக்குடி தருமபுரி பகுதி தொழிற்பேட்டைகள் பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் இதே திட்டங்களுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டபோது இதே திமுக மற்றும் அதன் தோழமைகட்சிகள் முன்னாள் முதல்வர் எடப்பாடி முதல் பாரதபிரதமர் மோடி வரை வசைபாடி தீர்த்ததோடு பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் மக்களுக்கு நன்மைபயக்கும் என தெரிந்தும் கடந்த ஆட்சியில் திமுக போராட்டத்தை முன்னெடுத்து தற்போது அதே திட்டத்தை அமல்படுத்தியிருப்பது விமசனத்திற்குள்ளாகியுள்ளது.

…..உங்கள் பீமா