Saturday, July 27, 2024
Home > செய்திகள் > மத்திய தலைமை கேட்ட ரிப்போர்ட்..! குஷியான தமிழக பிஜேபி தொண்டர்கள்..!

மத்திய தலைமை கேட்ட ரிப்போர்ட்..! குஷியான தமிழக பிஜேபி தொண்டர்கள்..!

21-12-21/ 16.36pm

டெல்லி : மத்திய பிஜேபி தலைமைக்குழு தமிழக பிஜேபி இணையதள குழுவிற்கு ரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலகட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசியதாக கூறி தென்மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை மத்திய புலனாய்வுத்துறை தேடி வந்து அள்ளிச்சென்றது. அது ட்விட்டரோ அல்லது மிகப்பெரிய சமூக வலைத்தளமோ இல்லாத காலம். அதே போல காங்கிரசை எதிர்த்து கருத்துக் கூறிய பலர் அதிகார துஷ்பிரயோகத்தால் அடக்கி வைக்கப்பட்டனர்.

இந்த கருத்துரிமையோ அல்லது எழுத்துரிமையோ பத்திரிக்கை சுதந்திரமோ பிரதமர் மோடியின் ஆட்சியில் மட்டுமே எதிர்பார்க்கப்படும். மேலும் சிறு விஷயம் கூட ஊடகங்களால் பெரிது படுத்திக் காண்பிக்கப்படும். மிக சமீபத்தில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் கற்பழிப்பை தடுக்க முடியவில்லை என்றால் கீழே படுத்து அனுபவியுங்கள் என சட்டசபையிலேயே கூறினார். அந்த விஷயம் ஊடகங்களால் மறைக்கப்பட்டது. அல்லது பெட்டிச்செய்தியாக மாறிப்போனது.

`

இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த அரசியல் கைதுகள் தமிழக பிஜேபியை கொந்தளிக்க செய்துள்ளது. தமிழக பிஜேபி தலைவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ” எந்த ஒரு மாநிலத்திலும் இதே வழக்கை போட முடியும்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் மத்திய தலைமைக்கு மாரிதாஸ் மற்றும் கல்யாணராமன் உட்பட 23 பேர் கைது குறித்து விரிவான விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து நேற்று மத்திய தலைமை தமிழக பிஜேபிக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அதில் பாரத பிரதமருக்கு எதிராகவும் இந்திய தேசத்துக்கு எதிராகவும் அரசின் சட்டங்கள் குறித்தது எதிர்மறையாகவும் பாகிஸ்தானை புகழ்ந்தும் இணையத்தில் பதிவிட்ட கருத்துக்களையும், பதிவிட்ட நபர்களின் அடையாளங்களையும் தினமும் சேகரித்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

```
```

இதனால் குஷியான பிஜேபி ஐடி விங் தொண்டர்கள் மாவட்டவாரியாக அவதூறான கருத்துக்களை பதிவிட்ட நபர்களின் சமூகவலைத்தள கணக்கை அலசி வருகிறார்கள். மாரிதாஸ் மீதான போடப்பட்டுள்ள பொய்யான வழக்கையொட்டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

….உங்கள் பீமா