Wednesday, April 17, 2024
Home > செய்திகள் > 2021 ல் மன்னிப்பு கேட்ட பிரபலங்கள் ஒரு தொகுப்பு..!

2021 ல் மன்னிப்பு கேட்ட பிரபலங்கள் ஒரு தொகுப்பு..!

01-01-2022

சென்னை : புதிதாய் பிறந்திருக்கும் 2022 எனும் குழந்தை நமது வாழ்வில் மகிழ்ச்சியை அள்ளித்தர இறைவனை வணங்கி இன்றைய விடுமுறை நாளை குடும்பத்துடன் குதூகலிப்போம். வாசகர்கள் அனைவருக்கும் மெட்ராஸ் டெலிக்ராம் சார்பாக ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்த 2021 ல் பொதுமக்களிடம் நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட சில பிரபலங்களை காணலாம். இந்த தொகுப்பில் முதலிடம் பிடிப்பவர் ராகுல் காந்தி. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் பிஜேபி ஊழல் செய்துள்ளது என்றும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களையும் மாறி மாறி பேசிய ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றத்தில் கோரினார். 2020லும் 2019ல் பாரத பிரதமர் மோடியை திருடன் என சொன்னதற்காகவும் மன்னிப்பு கோரினார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே மன்னிப்பு கோரினார். வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகளையும் அதனால் விவசாயிகள் பெறப்போகும் பலனையும் தடுக்கும் விதத்தில் சில போலி போராளிகள் செயலால் அந்த சட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. மேலும் நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்த சில தேசவிரோத சக்திகள் முயன்றன. மேலும் பல உயிர்கள் போராட்டம் எனும் பெயரால் பறிக்கப்பட்டன. இதையெல்லாம் உணர்ந்த பிரதமர் மோடி இந்த சட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு புரியவைக்க முடியவில்லை ஆதலாலும் நாட்டின் “பாதுகாப்பு” கருதியும் சட்டங்களை வாபஸ் பெறுகிறோம் என கூறி மக்களிடம் மன்னிப்பு கோரினார்.

`

காங்கிரஸ் தலைவரும் ஆதரவாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் ராமாயணம் நாடகம் தொலைக்காட்சியில் வருவது தன்னை பாதிக்கிறது என்கிற ரீதியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிமோட்டால் சேனல்களை மாற்றலாமே என கடிந்து கொண்டார். பின்னர் அந்த வழக்கு தொடுத்தமைக்கு நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

ஷாருக்கான் மகனான ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் சமீர் வான்கடேவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சமீரை ஆபாசகமாகவும் ஒருமையில் பேசி அவரது பிறப்பு குறித்த சந்தேகங்களை கிளப்பியிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான நவாப் மாலிக்.

இவர் அமைச்சரும் கூட. இவரது மகன் பல மாதங்களாக ஜாமீன் கூட கிடைக்காமல் போதைப்பொருள் விவகாரத்தில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீரின் குடும்பம் தேசியபிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் நவாப் குறித்து புகார் மனு ஒன்றை தாக்கல் செய்து வழக்கு விசாரணைக்கு விபாந்தது. அடுத்த சில நாட்களிலேயே சமீர் வான்கடே குடும்பத்தினரிடம் நவாப் மாலிக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

```
```

அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை மத்திய அரசு டெல்லிக்கு ஒதுக்குவதில்லை என வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் தனியாக ஒரு தணிக்கை குழு ஒன்றை நியமித்து கெஜ்ரிவாலின் வண்டவாளங்களை அறிக்கையாக அந்த குழு அளித்தது. அதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரி வேறு ஒரு மனு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றியும் கொரோனா தொற்று ஆக்சிஜன் தட்டுப்பாடு என தவறான பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழகத்தை சேர்ந்த சன்குழுமம் மற்றும் நியூஸ் 18 போன்ற செய்தி நிறுவனங்கள் மன்னிப்பு கோரின.

…..உங்கள் பீமா