Friday, June 9, 2023
Home > செய்திகள் > பிராந்திய அரசு செய்வதை மத்திய அரசால் செய்ய முடியவில்லையா..? ட்ரெண்ட் ஆகும் Disappointed..!

பிராந்திய அரசு செய்வதை மத்திய அரசால் செய்ய முடியவில்லையா..? ட்ரெண்ட் ஆகும் Disappointed..!

19-11-21/ 11.15am

டெல்லி : மத்திய பிஜேபி அரசு வேளாண் சட்டங்கள் அனைத்தையும் திரும்ப பெற்றது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பிராந்திய அரசுகளால் ஒரு சட்டத்தை அமுல்படுத்தப்படும்போது மத்திய அரசால் முடியவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர்.

பிரதமர் மோடி சீக்கிய துறவி குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை மக்களுக்காக உரையாற்றினார். அதில் “நாங்கள் செய்த கடின முயற்சியில் ஏதாவது குறை இருந்திருக்கலாம். அதனால் சில விவசாயிகளை திருப்திப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். இன்று நாட்டு மக்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

மூன்று வேளாண் சட்டங்களும் இன்றுமுதல் செல்லுபடியாகாது என அறிவிக்கிறேன். மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. என்னால் வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை புரியவைக்க முடியவில்லை. பல விவசாயிகள் ஏற்றுக் கொண்டாலும் சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் இந்த சட்டங்கள் திரும்ப பெறப்படுகிறது.

`

மேலும் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை புரிய வைக்க முடியாததால் மன்னிப்பு கோருகிறேன்” என கூறினார். இது பலத்த ஆதரவையும் அதே நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் ஒருசேர எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் ” பிரதமர் வார்த்தையை நன்கு கவனித்தால் தெரியும் உங்களுக்கு புரியவைக்க முடியவில்லையாதலால் மன்னிப்பு கோருகிறேன் என கூறியிருக்கிறார்.

அரசியல் நிர்பந்தத்தாலும் அடுத்தடுத்து வர இருக்கும் தேர்தல்களை மனதில் கொண்டும் இந்த முடிவெடுத்திருக்கலாம். இது பிஜேபியின் மாஸ்டர் ஸ்ட்ரோக். எதிர்க்கட்சிகள் போராட வழியில்லாமல் செய்துவிட்டார். இனி பிஜேபி அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம்” என கூறுகின்றனர்.

ஆனால் பிஜேபி ஆதரவாளர்கள் டிசப்பாய்ண்ட்மென்டட் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிஜேபி இதுவரை தாக்கல் செய்த சட்டங்களை மூன்றாவது முறையாக திரும்ப பெறுவதாக கூறப்படுகிறது.

…..உங்கள் பீமா