Friday, February 23, 2024
Home > செய்திகள் > கோயம்புத்தூரில் பரபரப்பு..! சாமி சிலையை உடைத்த மர்மநபர்கள்..!

கோயம்புத்தூரில் பரபரப்பு..! சாமி சிலையை உடைத்த மர்மநபர்கள்..!

01-01-2022

கோயம்புத்தூர் : தமிழகத்தில் இந்துக்களின் கோவில்கள் மற்றும் கோவில் சிலைகள் தகர்க்கப்படுவதும் சேதப்படுத்தப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கோயம்புத்தூரில் புத்தாண்டு தினமான இன்று சாமி சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி 22ஆவது வார்டில் அமைந்துள்ளது பழமையான பாரதி பூங்கா. கோயம்புத்தூர் சிறுவாணி நீர் இங்கு புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு இங்குள்ள குளத்தில் வருவதாக ஐதீகம். உண்மையும் கூட. நாற்பது ஆண்டுகளுக்கு மேலான இந்த பழமையான பூங்காவில் பகவான் கிருஷ்ணர் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

`

புத்தண்டு தினமான இன்று அதிகாலை மர்மநபர்கள் யாரோ சிலையை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். காலையில் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கோயம்புத்தூர் பிஜேபி மாவட்ட செயலாளர் எம்.கே குமார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மேலும் சிபிசிஐடி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து உடைக்கப்பட்ட சாமி சிலையை மீட்டிருக்கின்றனர்.

```
```

இந்த 22ஆவது வார்டின் கவுன்சிலர் பிஜேபியை சேர்ந்த ஜெயலட்சுமி ஸ்ரீனிவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை உடைப்பின் மூலம் இரு பிரிவினருக்கிடையே மோதலை உண்டாக்கும் நோக்கத்தில் யாராவது ஈடுபட்டார்களா அல்லது நாத்திகம் பேசி கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட யாராவது சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்பட்டார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வைத்த பின்னர் தான் இதே போல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என இந்து அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா