Saturday, October 5, 2024
Home > செய்திகள் > நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு..! ஒருவர் பலி..? பலர் கவலைக்கிடம்..!அதிர்ச்சி புகைப்படங்கள்..!

நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு..! ஒருவர் பலி..? பலர் கவலைக்கிடம்..!அதிர்ச்சி புகைப்படங்கள்..!

23-12-21/13.41pm

பஞ்சாப் : நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இன்று நடந்த சம்பவம் நீதிமன்றங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நீதிமன்றங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும் நீதிமன்றம் புகுந்து கொலை செய்வதும் நீதிபதியையே ஜீப் வைத்து ஏற்றிக் கொல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ” வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்றத்திற்குள்ளேயே நடக்கும் அசம்பாவிதங்கள் அதிர்ச்சியை தருகிறது. நீதிபதிகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்த்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது 12 மணி அளவில் (தோராயமாக) நீதிமன்றத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. அதில் சிக்கிய பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

`

இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு விரைந்தனர். குண்டு வெடித்ததால் அனைவரும் தலைதெறிக்க ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கி பலர் காயமடைந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

மேலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன. போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததா அல்லது வேறு யாரும் இந்த கொடும்செயலில் ஈடுபட்டனாரா என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

…..உங்கள் பீமா