Friday, February 7, 2025
Home > அரசியல் > கர்நாடக முதல்வருக்கு பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் CT ரவி கோரிக்கை..!! விமர்சித்த விருதுநகர் எம்பி..!

கர்நாடக முதல்வருக்கு பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் CT ரவி கோரிக்கை..!! விமர்சித்த விருதுநகர் எம்பி..!

நேற்று ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்தை தொடர்ந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் ஒருசேர பெருகிவருகின்றன. பல விளையாட்டு மைதானங்களுக்கு விளையாட்டில் சாதித்த வீரர்கள் வீராங்கனைகள் பெயரை சூட்ட சொல்லி கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.


மேலும் இன்று பிஜேபியின் தேசிய பொதுச்செயலாளர் CT ரவி தனது ட்விட்டரில் கர்நாடக முதல்வரான பொம்மை அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் அவர் “கர்நாடகாவில் இயங்கி வரும் இந்திரா கேன்டீனை விரைவில் அன்னபூர்ணேஸ்வரி என பெயர்மாற்றம் செய்ய கோரிக்கை வைக்கிறேன்.

`

மேலும் கன்னடிகர்கள் ஒவ்வொருமுறை உணவருந்தும்போதும் எமெர்ஜென்சி காலத்தில் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்துகிறது. பெயரை மாற்ற வேறெதுவும் காரணம் தேவையில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

```
```

இதற்கு பதில் ட்வீட் போட்டிருந்த விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் “சங்கிகளின் மனநிலை இது தான், சங்கிகள் ஏன் புதிய ஒன்றை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டக்கூடாது. 2023 தேர்தல் சங்கிகளுக்கு பாடம் கற்பிக்கும்” என தான் ஒரு எம்பி என்பதை மறந்து வார்த்தைகளை பிரயோகப்படுத்தியுள்ளார்.

…உங்கள் பீமா