Friday, March 29, 2024
Home > அரசியல் > தடம் புரளும் தமிழக அரசியல்..! காத்திரு செருப்பே..?

தடம் புரளும் தமிழக அரசியல்..! காத்திரு செருப்பே..?

22-12-21/16.16pm

தமிழகம் : தமிழகத்தில் அரசியல் எப்போதும் திராவிடத்தை முன்னிறுத்தியதே. ஆனால் திராவிடத்திற்கான விளக்கம் யாராவது கேட்டால் தெளிவான பதில் கிடைத்ததில்லை. நெஞ்சுக்கு நீதி, போலீஸ்காரன் மகள், ஓர் இரவு போன்ற அரும்பெரும் காப்பியங்களை முன்வைத்து விளக்கம் கொடுக்கப்படும்.

காமராஜர் காலத்தில் அவரை ஒருமையில் பேசிய இல்லை இல்லை அருவருக்கத்தக்க வகையில் பேசிய அந்த கால அரசியல் மீண்டும் வந்துவிட்டதோ என தமிழக மக்கள் கவலை கொள்கின்றனர். அண்டங்காக்கை கருவாட்டுக்கறி மகன் கருந்தோலன் என இழிவார்த்தைக்கு ஆளாகியும் மக்களின் நலனில் கவனம் செலுத்தியவர் காமராஜர்.

நிற்க. காமராஜர் கால அரசியல் என குறிப்பிட்டிருப்பது ஆபாச தனிமனித தாக்குதல் தொடுக்கும் அரசியலை. தற்போது சீமான் மற்றும் அவரின் தொண்டர்கள் மேடையில் பொய் சொல்வது சலித்துவிட்டது என கருதி அநாகரிக வார்த்தைகளில் ஒரு அப்பன் ஆத்தா என படுகேவலமாக பேச ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவு மேடையேறி தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

`

இதோடு நில்லாமல் தூங்கிய பூதத்தை கிளப்பியது போல காமராஜர் கால அரசியலை திரும்ப அழைத்துக் கொண்டுவந்துவிட்டது சீமான் குழு. அதன் ஒரு பகுதியே மேடையேறித்தாக்குதல். மேலும் பிரபல முன்னணி முதன்மை கட்சியின் மாநில ஐடி விங் செயலாளர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அது தமிழக அரசியலின் மாண்பை பளிச்சென எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

```
```

” நீ செருப்படி வாங்கற வரைக்கும் இப்படித்தான் பேசிட்டு சுத்துவ.காத்திரு செருப்பே” என சீமானை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். உலகில் நாகரிகத்தின் முன்னோடி தமிழன் என்ற வரலாறு காணாமல் போய் அநாகரிக அரசியலில் விழுந்துவிட்டோமோ என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா