Friday, April 18, 2025
Home > அரசியல் > முடியலைன்னா விஷம் குடிச்சு செத்துப்போ..! ஜோதிமணி எம்பியை கலாய்த்த சீமான்..!

முடியலைன்னா விஷம் குடிச்சு செத்துப்போ..! ஜோதிமணி எம்பியை கலாய்த்த சீமான்..!

சமீபத்தில் தேசிய கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் உள்ளுணர்வு பொங்கி பலான வேலைகளில் ஈடுபட்டு, அது வீடியோவாக வெளிவந்தது. அதையடுத்து கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த பெண் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்” நாட்ல நடக்காத ஒண்ணா நடந்துருச்சு. ரெண்டு பேரோட அந்தரங்க வீடியோவை இப்படி பொதுவெளியில் விட்டது நல்லா இல்ல” என்று குறிப்பிட்டார். இதையடுத்து பெண்களின் பாதுகாவலர் மற்றும் எங்கெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுவார்களோ அங்கெல்லாம் தனித்து நின்று போராடி பல பெண்களின் வாழ்க்கையை மாற்றி,

`

கரூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, இந்தியாவின் நியூயார்க்காக கரூரை மாற்றிக்கொண்டிருக்கும் எம்பி ஜோதிமணி அவர்கள் சீமானை தாக்கி ஒரு வீடியோ வெளியிட்டார். ஜோதிமணி வீடியோ பற்றி சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது ” ரொம்ப முடியலன்னா விஷம் குடிச்சு சாக சொல்லுங்க ஜோதிமணிய” என்று நிருபர்களிடம் கிண்டலடித்தார்.

```
```

அதையடுத்து நேற்று மீண்டும் ஜோதிமணி சீமானை தாக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். நீங்க மட்டும் ஒழுக்கமா என அவர் சார்ந்த கட்சியை விமர்சித்து வருகின்றனர் தம்பிகள். “சமீபத்தில் மதுரை காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயருக்கேற்றார் போல “காம” ராஜாக மாறி மஹிளா காங்கிரசை சேர்ந்த பெண்களிடம் ஆபாசமாக பேசியிருக்கிறார்.’ நீங்கள் இதற்க்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். என ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர் தம்பிகள்.

…உங்கள் பீமா