டில்லியில் கடந்த வாரம் பட்டியலின சிறுமி ஒருவர் சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டப்பகலில் வழிப்பறியும் துப்பாக்கி சூடு கலாசாரமும் வேகமாக பரவிவருகிறது. மேலும் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்படும் சம்பவமும் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது.
மேலும் பட்டியலின சிறுமிகள் அடிக்கடி கடத்தப்பட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்,நேற்று ஒரே நாளில்நடந்த சம்பவங்களை பட்டியலிடும்போது, ஆல்வார் பகுதியில் 16 வயது தலித் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அஜ்மீர் பகுதியில் தலித் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம், பலாத்கார முயற்சியில் 15 வயது தலித் சிறுமி சிகார் பகுதியில் கொல்லப்பட்டார்.
மேலும் நஹவுர் பகுதியில் 14 வயது தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இப்படி ஒரே நாளில் நான்கு தலித் சிறுமிகள் பாதிக்கப்பட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை என ராஜஸ்தான் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
“டெல்லியில் நடக்கும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தாலோ இல்லை பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினாலோ ஊடக வெளிச்சம் கிடைக்கும். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்தால் ஊடக வெளிச்சமும் கிடைக்காது ஆட்சிக்கும் அவப்பெயர் வந்துவிடும்” என வாய் மூடி மவுனம் காக்கிறார் என ராஜஸ்தான் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
…உங்கள் பீமா