28-3-22/13.53PM
புது தில்லி : மிசோராம், நாகலாந்து, லட்சத்தீவுகள் மற்றும் ஜம்மு,காஷ்மீர் மணிப்பூர்,அருணாச்சலப்பிரதேசம் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் 2020ல் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பலமுறை வாய்ப்புகள் வழங்கியிருந்தது, மேலும் சிலமுறை அபராதமும் விதித்திருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் 28 மார்ச் அன்று மத்திய அரசு சிறுபாண்மை அந்தஸ்து வழங்குவது குறித்து பிராமண பாத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என கெடு விதித்திருந்தது.

இதனிடையே இன்று வழக்கின் மீதான விசாரணை இன்று தொடங்கியது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமணபத்திரத்தில் “2016ம் ஆண்டு யூதர்களை சிறுபான்மையினராக அறிவித்துள்ளது. மேலும் உருது தெலுங்கு, தமிழ்,குஜராத்தி,கொங்கணி மொழிகளை கர்நாடக அரசு சிறுபான்மையாக அறிவித்துள்ளது. அந்தந்த மாநிலங்கள் சிறுபான்மை அந்தஸ்து வழங்க அதிகாரம் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சகத்தின் துணைசெயலர் சுபேந்து சேகர் ஸ்ரீவத்சவா அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்
இனி மாநிலங்களில் சிறுபான்மையாக இருக்கும் ஹிந்துக்களுக்கு சலுகைகள் கிடைக்க எந்த தடையும் இருக்காது என கூறப்படுகிறது. மேலும் அந்தந்த மாநிலங்கள் ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க முன்வரவேண்டும் என ஹிந்து அமைப்புகள் குரல்கொடுத்து வருகின்றன. ஏற்கனவே ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விவரங்களுக்கு
….உங்கள் பீமா
