சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ளது ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை. இங்கு நேற்று ஒன்பதாம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப்பெண்களுக்கு கட்டில்கள் ஒதுக்கப்படாமல் தரையில் படுக்கவைத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர்களின் உறவினர்கள் ” இங்கு இந்த அவலம் சிலகாலமாகவே தொடர்கிறது. இதை சூப்பிரெண்டன்ட்டிடம் தெரிவித்தும் பயனில்லை. எப்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்” என தெரிவித்தனர்.
அங்கு உள்ள காவலாளிகளிடம் விசாரித்த போது ” செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என கடுமையான உத்தரவாள பிறப்பித்திருக்கிறார் சூப்பிரெண்டன்ட். உள்ளே நிலவும் சுகாதார அவலங்களை புகைப்படமெடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது ராயபுரம் காவல் நிலையத்திலேயே புகார் அளித்துள்ளார். அதனால் உள்ளே செய்தியாளர் அனுமதியில்லை.” என தெரிவித்தனர்.
மேலும் கடந்த மாதம் இதே சூப்பிரெண்டன்ட் செவிலியர்களை தரக்குறைவாக பேசி அதனால் பெரிய போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. செய்தியாளர்கள் மேல் உள்ள புகார் குறித்து, ” செய்தியாளர்கள் அத்துமீறி மகப்பேறு வார்டில் நுழைந்ததற்கான சிசிடிவி ஆதாரத்தை கேட்டிருக்கிறோம். ஆனால் நிர்வாகத்தரப்பில் இன்னும் அதை தரவில்லை. அது கிடைத்தபின்னரே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் ” என ராயபுரம் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த சூப்பிரெண்டன்ட்டின் கணவர் இதே மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராயபுரம் பகுதிமக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.
……..உங்கள் பீமா
#rsrmhospital #royapuram #masubramaniyan #dmk