Friday, March 29, 2024
Home > செய்திகள் > மடத்தின் மீது கல்வீசி தாக்குதல்..! லவ்ஜிஹாத் விமர்சனம் காரணமா..?

மடத்தின் மீது கல்வீசி தாக்குதல்..! லவ்ஜிஹாத் விமர்சனம் காரணமா..?

01-01-2022

கர்நாடகா : மடத்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவலறிந்த இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் அப்ஜல்பூர் கல்பர்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது மாசாலா சித்தலிங்கேஸ்வரா சம்ஸ்தான் மடம். இங்கு வியாழன் அன்று இரவு மர்மநபர்கள் தொடர் கல்லெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 28 அன்று இந்து துறவியான கேதார் ஸ்ரீ ஸ்வாமிஜி இந்து ஜாக்ருதி சேனா அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

அதில் பேசிய அவர் லவ் ஜிஹாத்துக்கு எதிராகவும் பசுவதை பசுக்கள் கொலை செய்யப்படுவது குறித்து உரையாற்றினார். இது குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் ஆத்திரத்தை தூண்டியதாக தெரிகிறது. அதையடுத்து அன்று இரவு மர்மநபர்கள் தொடர் கல்லெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மடத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்தன. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என மடத்தின் தரப்பு தெரிவிக்கின்றன.

`

இதுகுறித்து பேசிய ஜாக்ருதி சமிதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் ” காரியகர்த்தாக்கள் துறவிகள் பலரை அழைத்திருந்தோம். மாசாலா ஸ்ரீ ஸ்வாமிகளும் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் லவ்ஜிஹாத் பற்றியும் அதற்க்கு எதிராகவும் பசுவதைக்கு எதிராகவும் பேசியிருந்தார். மேலும் கட்டாய மதமாற்றம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இது சிலரை புண்படுத்தியதால் மடத்தின் மீது தாக்குதல் தொடுத்திருக்கலாம்” என தெரிவித்தார்.

```
```

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பாதுகாப்பு மடத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்ஜல்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். இந்த பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா