28-3-22/11.16AM
அஸ்ஸாம் : மாநில முதல்வர் ஹிமந்தா அரவிந்த் கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு தக்க பதிலடி கொடுத்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த செயல் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு தினங்களுக்கு தினங்களுக்கு முன்னர் டெல்லி சட்டமன்றத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் காஷ்மீரி பைல்ஸ் திரைப்படத்தை கிண்டலடித்து சிரித்தார். அவர் பேசியதாவது “பிஜேபி அந்த படத்திற்கு விளம்பரம் செய்கிறது. அந்த திரைப்படம் பொய்யை மட்டுமே எடுத்துரைக்கிறது. (சொல்லிவிட்டு சிரித்தார்) வேண்டுமெனில் யூ டியூபில் அந்த திரைப்படத்தை பதிவேற்றுங்கள்.

நாங்கள் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கமாட்டோம். இந்த திரைப்படம் காயம்பட்டவர்கள் மீது உப்பை தேய்ப்பது போலாகும். முழுக்க முழுக்க பொய்யான கதை” என கூறினார். இதற்க்கு நேற்று பதிலடி கொடுத்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ” நீங்கள் வரிவிலக்கு செய்கிறீர்களோ இல்லையோ எங்களை அவமானப்படுத்தவும் அவமதிக்கவும் உங்களுக்கு உரிமை இல்லை.
நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஹிந்து விரோதியாக இருக்காதீர்கள். நமது சமூகம் இந்த நிலையில் இருக்கிறது எனில் ஹிந்து குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் இல்லை. இந்த உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்தது ஹிந்து சமூகம். நீங்கள் எத்தனை படங்களுக்கு உள்நோக்கத்துடன் வரிவிலக்கு அளித்தீர்கள் என்பதை உலகறியும்.
அப்போது நீங்கள் யூட்யூபில் பதிவேற்றம் செய்திருக்கலாமே. நீங்கள் பண்டிட்டுகளை கேலி செய்வதை நிறுத்துங்கள். மதசார்பற்ற வேடம் போடும் உங்களை போன்றவர்களின் கீழ்த்தரமான அணுகுமுறை தான் அவர்களின் துன்பங்களுக்கு காரணம்” என முதல்வர் ஹிமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
…உங்கள் பீமா
