Tuesday, May 5, 2026
Home > செய்திகள் > மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..! சிறுபான்மையினரான ஹிந்துக்கள்..?

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..! சிறுபான்மையினரான ஹிந்துக்கள்..?

27-3-22/16.12PM

புதுதில்லி : 2002ல் T.M.A பாய் என்பவர் தொடுத்த வழக்கில் எதிர்ப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் நாளை மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவித்துள்ளது.

2020 ஜனவரி 7 ல் பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் கூறுகையில் இன்னும் நான்கு வாரத்தில் அபிடவிட் தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் கேரளா வடகிழக்கு மாநிலங்கள் உட்பட ஏழுமாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்தவருடம் ஜனவரி 31ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அரசுக்கு 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் தரப்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜிடம் ” உங்களுக்கு எத்தனை தடவை வாரங்கள் அவகாசம் அளிப்பது.

இது உணர்வு ரீதியான வழக்கு. இதை அரசியலாக்காதீர்கள். இது நன்றாக இல்லை. ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள்” என கூறினர். இதற்க்கு பதிலளித்த நடராஜ் ” நாங்கள் சீக்கிரம் இதற்க்கு ஒரு தீர்வு காண்கிறோம். அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போய்விட்டது” என கூறினார்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் “ஒரு அமைச்சகத்திடம் கேட்டால் மற்ற அமைச்சகத்தை கைகாண்பிக்கிறீர்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டும். திங்கட்கிழமை 28 மார்ச் அன்று வழக்கு மீதான விசாரணை மீண்டும் தொடரும்” என கூறினர். மேலும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் மத்திய சிறுபான்மையின நல அமைச்சகம் மற்றும் மினிஸ்ட்ரி ஆப் ஹாம் அபெயர்ஸ் மூன்று அமைச்சகத்திடம் இருந்தும் பிரமாண பத்திரத்தை கோரியுள்ளது நீதிமன்றம்.

மத்திய அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மையின ஹிந்துக்களை கருத்தில் கொண்டு நாளை பதில்மனு தாக்கல் செய்யும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஹிந்துக்களின் பாதுகாவலனான பிஜேபி நல்ல முடிவை நிச்சயம் எடுக்கும் என நம்பலாம்.

….உங்கள் பீமா