20-11-21/12.44pm
சிங்கப்பூர்; சிங்கப்பூர் இந்தியாயிடையேயான விமனப்போக்குவரத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவல் வெளிவரும் முன்னரே திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்திருந்தார். அப்போது இருநாட்டு வர்த்தகம் வெளியுறவுக்கொள்கை உள்ளிட்ட பல அரசியல் விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியா சிங்கப்பூர் இடையேயான போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்களை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டது.

அதையடுத்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் இருநாட்டு போக்குவரத்துக்கான விமானங்களை அதிகரிக்க ஒப்புக் கொண்டார். இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரும் முன்னரே திமுக முந்திக்கொண்டு ஸ்டிக்கர் ஓட்டும் வேலையில் இறங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களுக்கு புது பெயர் சூட்டியதோடு மட்டுமல்லாமல்,

மத்திய மோடி அரசு மற்றும் கடந்த அதிமுக அரசு கொண்டுவந்த பல திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டுள்ளது திமுக என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல உயிர்கள் பலியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கிரிக்கட் அணிக்கு பாராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கிறது என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
…..உங்கள் பீமா