Friday, March 29, 2024
Home > செய்திகள் > கன்னியாகுமாரியில் பதட்டம்..! மீண்டும் இடிக்கப்பட்ட கோவில்..! திமுக ஆட்சியில் குறிவைக்கப்படுகிறதா இந்து கோவில்கள்..??

கன்னியாகுமாரியில் பதட்டம்..! மீண்டும் இடிக்கப்பட்ட கோவில்..! திமுக ஆட்சியில் குறிவைக்கப்படுகிறதா இந்து கோவில்கள்..??

20-11-21/ 13.27pm

கன்னியாகுமரி : திமுக ஆட்சியில் இந்துக்களின் கோவில்கள் குறிவைத்து மர்மநபர்களால் இடிக்கப்பட்டுவருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் கன்னியாகுமரியில் மீண்டும் ஒரு கோவில் இடிக்கப்பட்டது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே கோயம்புத்தூரில் பல நூறு வருடங்கள் பழமையான கோவில்கள் சில இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதற்க்கு அடுத்த சிலநாட்களிலேயே திருச்செங்கோட்டில் பிள்ளையார் கோவில் ஒன்று இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதுரையி சில கோவில்கள் இடித்து தகர்க்கப்பட்டது.

இதுதவிர மர்மநபர்களால் சிறுவாச்சூர் கோவில் வேலூர் அருகில் உள்ள கோவில் மற்றும் பல கோவில்கள் தமிழகமெங்கும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆனைக்கல் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற சொட்டுநீர் சாஸ்தா கோவில் நேற்று மர்மநபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

`

இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் போராட்டம் அறிவிக்கப்படும் என பக்தர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக அரசு இதுவரை கோவில்களை சேதப்படுத்திய எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

…..உங்கள் பீமா

pls subscribe : www.madrastelegram.com