Friday, April 18, 2025
Home > செய்திகள் > முந்திரி மந்திரிக்கு ஜாமீன்..! கருத்து சொன்ன கல்யாணராமனுக்கு கம்பி..!

முந்திரி மந்திரிக்கு ஜாமீன்..! கருத்து சொன்ன கல்யாணராமனுக்கு கம்பி..!

20-11-21/11.44 AM

கடலூர் : முந்திரி ஆலை மந்திரிக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் கருத்து சொன்ன கல்யாணராமன் உட்பட இருவர் கம்பிகளுக்குப்பின்னால் நீதிகிடைக்காமல் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள திமுக எம்பி ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் அப்பாவி தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அதற்க்கு காரணமாக கருதப்பட்ட திமுக எம்பி உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் நேற்று எம்பி ரமேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதற்க்கு நேர்மாறாக பாரத பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கட்சியினரை எதிர்த்து பதில் கருத்திட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனை திமுக அரசின் காவல்துறை நள்ளிரவில் தேடப்படும் குற்றவாளியை கைது செய்வது போல கைது செய்தது.

`

நீதிமன்றத்தின் பார்வையில் அவர் அரசியல் கைதி என கூறப்பட்டாலும் அப்படி காவல்துறை நடத்தவில்லை என கல்யாணராமனின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமனின் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவின் மீதான விசாரணையை மேலும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். திமுக தரப்பில் கல்யாணராமன் மீதான வழக்கை இழுத்தடிப்பதற்க்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

எதிர்க்கட்சியாக இருந்தபோது கருத்து சுதந்திரத்தை பற்றி பாடம் எடுத்த திமுக ஆளும்கட்சியானதும் தனக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் குரல்வளையை நெரிக்கிறது என நடுநிலை பத்திரிக்கையாளர்கள் குமுறுகின்றனர். கல்யாணராமன் மீது உள்ள காழ்புணர்ச்சியே திமுகவினரை இப்படி செயல்பட வைக்கிறது என கல்யாணராமனின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

……உங்கள் பீமா