Saturday, July 27, 2024
Home > அரசியல் > கலைஞர் மீது ஆணையாக இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான்..! முதல்வர் திட்டவட்டம்..! ட்ரெண்ட் ஆகும் டி.எம்.கே பெயில்ஸ்..!

கலைஞர் மீது ஆணையாக இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான்..! முதல்வர் திட்டவட்டம்..! ட்ரெண்ட் ஆகும் டி.எம்.கே பெயில்ஸ்..!

07-01-22/13.10pm

சென்னை ; தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் “தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. திமுகவை சேர்ந்த யாராவது தவறு செய்தாலோ அல்லது சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலோ நிச்சயமாக உறுதியாக அண்ணா மீது ஆணையாக கலைஞர் மீது ஆணையாக இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான்” என உணர்ச்சிமேலிட ஆவேசமாக பேசினார்.

ஆனால் எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன் மீது எழும்பூர் சாலையோர கடை உரிமையாளர்கள் 10 லட்சம் தண்டல் கேட்பதாக புகார் எழுப்பியிருந்தனர். இதை பற்றி நமது செய்தியில் தெரிவித்திருந்தோம். மேலும் சில முக்கியமான பத்திரிக்கைகளில் ஆதாரங்களோடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

`

மேலும் மைலாப்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னையை சேர்ந்த சில முக்கிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது புகார் ஆதாரங்களோடு ஒரு தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் திமுக மாவட்ட அளவில் பொறுப்பில் இருப்பவர்கள் கரும்பு விவசாயிகளிடம் 33 ரூபாய்க்கு பதிலாக 15 ரூபாய் பேரம் பேசி பாதிக்கு பாதி கமிஷன் பெற்றுக்கொண்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளும் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிலக்கோட்டை அருகே வயதான தம்பதிகளை திமுக பிரமுகர் ஒருவர் கடப்பாரை கொண்டு குத்த முயன்ற காட்சி இணையத்தில் வைரலாகியது. தென்காசி அருகே புளியறையில் திமுக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரின் சேலையை பொதுமக்கள் முன்னிலையில் அவிழ்த்து எறிந்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.

```
```

இப்படி திமுகவினர் செய்த அட்டூழியங்களுக்கு திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் தனது இரும்புக்கரம் கொண்டு திமுகவினரை அடக்கி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

……உங்கள் பீமா