Thursday, June 20, 2024
Home > அரசியல் > எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்..!? கரூரில் சோகம்..!

எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்..!? கரூரில் சோகம்..!

31-1-22/15.30pm

கரூர் : தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் கரூர் எம்பி ஜோதிமணியை கலந்தாலோசிக்காமல் திமுகவினர் தன்னிச்சையாக முடிவெடுத்து கூட்டணியை அவமதித்துவிட்டதாக திமுக மீது பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 அன்று ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு முடிவு எட்டப்படாத நிலையில் பிஜேபி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

திமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் மதிமுக விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா இரண்டு இடமும் காங்கிரசுக்கு நான்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி கலந்துகொண்டார்.

`

அவரை கலந்தாலோசிக்காமல் திமுகவினர் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக திமுகவினரிடம் முறையிட்ட ஜோதிமணி ” நான் ஒன்றும் அவர்கள் வீட்டு விருந்துக்கு வரவில்லை. என்னை பேச்சுவார்த்தையின்போதே வெளியேற சொல்லிவிட்டார்கள். இது கூட்டணி தர்மமா” என கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆவேசமாக ஜோதிமணி பேசியதை வீடியோ எடுத்த ஒருவரை ஜோதிமணி உடன் வந்தவர் மிரட்டும் காட்சியும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே கரூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் தன்னை மதிக்கவில்லை எனவும் நலத்திட்ட உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஓத்துழைப்பு தரவில்லை என்றும் ஜோதிமணி பரபரப்பு புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

```
```

….உங்கள் பீமா

#karur #jothimani #urbanbodyelection #senthilbalaji