Friday, April 18, 2025
Home > அரசியல் > களையெடுக்கும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! கலங்கும் தலைவர்கள்..!

களையெடுக்கும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! கலங்கும் தலைவர்கள்..!

3-11-21 / 17.35pm

அண்ணாமலை என்ற பெயருக்கேற்றாற் போல பதவியேற்ற போது மௌனம் காத்த தமிழக பிஜேபி தலைவர் தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். களையெடுக்கும் படலம் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

அண்ணாமலை பதவியேற்ற போது மீடியாக்களிடம் சொன்ன வார்த்தை “அண்ணா.இன்னும் ஆறு மாதத்தில் நிலைமை மாறும் . மீடியாக்கள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் விதம் மாறிப்போகும்” என ரஜினிகாந்த் போல பஞ்ச் வசனம் பேசினார்.

அதே போல மூன்றே மாதங்களில் மீடியாக்கள் அண்ணாமலையை மொய்க்க வைத்து விட்டார். தினம் தினம் பரபரப்பு தினம் தினம் அதிரடி என தமிழகம் காணாத அதிரடி அரசியலை கையிலெடுத்திருக்கிறார். கட்சியை தாண்டி உள்ள சிக்கல்களை களைந்து மக்களிடம் நெருங்கிய அண்ணாமலை உட்கட்சியில் நடக்கும் சிறு சிறு பூசல்களையும் சிலரின் கட்டுப்பாடற்ற போக்குகளையும் கவனிக்க தவறவில்லை.

`

அதற்க்கான நடவடிக்கைகளை டெல்லி சென்று உறுதிப்படுத்திய பிறகு ஆரம்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஐந்து மாவட்ட தலைவர்களும் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களும் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மகளிர் அமைப்பில் பலர் மாற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நடவடிக்கைகள் கட்சியில் அடிமட்ட தொண்டர்களிடமும் பாஜக அபிமானிகளிடமும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாமலை அவர்கள் பிஜேபி ஒரு தமிழர் நலன் சார்ந்த கட்சி என ஏற்கனவே மக்களிடம் நிரூபித்து விட்டார்.

```
```

தற்போது எடுக்கவிருக்கும் நடவடிக்கையால் கட்சியில் உள்ள இளைஞர்கள் பலர் உற்சாகத்தில் திளைப்பதாக சொல்லப்படுகிறது. திராவிடம் அல்லாத ஒரு தேசிய கட்சியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் தலைவர் அண்ணாமலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

……..உங்கள் பீமா

#tnbjp #annamalai #districtpresidents #அண்ணாமலை