கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று திருநெல்வேலி பாளையம்கோட்டை சிறைச்சாலை அருகே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தினர். சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை பெற்ற இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பி முழக்கங்கள் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்தார். மேலும் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி 700 ஆயுட்கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் எனவும் அறிவித்துள்ளார்.
இது பலத்த சந்தேகத்தை கிளம்புவதாக விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். “கடந்த வாரம் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதும் இந்த வாரம் சிறை கைதிகள் விடுவிப்பு அறிக்கை வருகிறது. அப்படியெனில் விடுவிக்கப்படும் கைதிகளின் விவரங்களை அரசு அறிக்கையாக வெளியிடுமா” என கேள்விகளை எழுப்புகின்றனர்.
..உங்கள் பீமா