உத்திரபிரதேசம் பிரோஸாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜு. இவர் விவசாய கூலித்தொழிலாளி. பிழைப்புக்காக குடும்பத்துடன் பஞ்சாப் சென்றிருக்கிறார். அங்கு முக்தார் சாஹிப் மாவட்டம் கானே கே தாப் கிராமத்தை சேர்ந்த ரகுபிர்சிங் ரன்பவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் பாபு சிங் என்பவர் அதிக கூலி தருவதாக கூறவே அவரிடம் கூலி வேலைக்கு சென்றிருக்கிறார்.
அங்கு போனதும் பாபுசிங் ராஜுவின் குடும்பம் தங்குவதற்கு இடவசதி ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கிறார். பழைய முதலாளியிடம் ராஜு வாங்கிய 15000 கடனையும் திருப்பி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் 2000 பாபுசிங் ராஜுவிடம் செலவிற்கு கொடுக்கவே அதை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க குடும்பத்துடன் கடைக்கு சென்றிருக்கிறார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த பாபுசிங் அவர்களை மிரட்டி வீட்டுக்கு போச்செல்ல வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வீடு திரும்பியதும் பின்னால் வந்த பாபுசிங் ராஜூவை தாக்கி அவரது குடும்பத்தை வீட்டிற்குள் தள்ளி கதவு பூட்டிவிட்டார்.
பின்னர் ராஜுவிடம் பழைய முதலாளிக்கு கொடுத்த 15000த்தை திருப்பி கொடுத்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். ராஜு காவல்துறையை அணுகியிருக்கிறார். காவல்துறை அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டது.
ஆனால் அந்த பாபுசிங் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ராஜு விவசாயிகள் சங்கத்திடம் முறையிட்டிருக்கிறார். பாபுசிங் ஆளும்கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தலையீட்டால் பாபுசிங் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என ராஜுவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.