11-3-22/15.56PM
உத்திரபிரதேசம் : 2022 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதாக பிஜேபியினர் கொண்டாடிவரும் வேளையில் பிஜேபியின் வளர்ச்சி குறைந்திருப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ல் 312 இடங்கள் வெற்றிபெற்று அட்டகாசமாக ஆட்சியை பிஜேபி இந்தமுறை சறுக்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மொத்தவாக்குகளின் எண்ணிக்கையில் சிறிய வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி இரண்டாம் இடத்தைப்பெற்றிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 84 ரிசர்வ் தொகுதிகள் மற்றும் 2 ட்ரைபல் தொகுதிகள் அடங்கும்.
கடந்த 2017 தேர்தலில் 70 ரிசர்வ் தொகுதிகளை வென்ற பிஜேபி இந்தமுறை பலத்த சறுக்கலை சந்தித்துள்ளது. தலித்துகளின் காவலன் என தன்னை காட்டிக்கொள்ளும் மாயாவதி கூட இந்தமுறை ரிசர்வ் தொகுதியில் ஒரு இடம் கூட பெறவில்லை. சுயேச்சைகளும் அங்கே தோற்றுப்போயினர். இந்த ரிசர்வ் தொகுதியில் பிஜேபி இந்தமுறை 34 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது.
பிஜேபி கூட்டணியான அப்னா தள் 2017ல் பெற்ற மூன்று இடங்களை கூட பெறமுடியவில்லை. இந்த ரிசர்வ் தொகுதியில் சமாஜ்வாடி கூட்டணி 52 இடங்களை பெற்று பிஜேபிக்கு அதிர்ச்சிவைத்தியம் அளித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக எடுத்துச்சென்றால் மட்டுமே இனி வரும்காலத்தில் அம்மக்களின் பேராதரவை பெறமுடியும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.
ஆக்ரா ரூரல், ஆக்ரா CNNT, லால்கஞ்,ஜெகதிஷ்பூர்,மிலக் ,அவ்ர்யா, போவாயான்,ஜலேஸர், ஹஸ்தினாபூர், ராம்பூர்,குர்ஜா, பாரித்ப்பூர்,கண்ணுஜ், ஆரியா, மோஹன்,மஹ்முதாபாத்,சபிர்பூர், கோபாமாவ்,பாலாமவ்,சண்டி,ரஸூலாபாத்,நாரயணி, டிண்டிலா,மோகன்லால் கஞ்ச், சித்தூவலி, ஹைதர் கார்க்,புரான்பூர், பலரம்புர், காஜானி, சலீம்பூர்,அவரை, தாங்காட்ட, மஹாராஜ் கஞ்ச், உள்ளிட்ட 34 இடங்களில் மட்டுமே பிஜேபி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தமுறை பெற்ற 312 இடங்களில் தற்போது ரிசர்வ் தொகுதியில் மட்டுமே 52 இடங்களை இழந்துள்ளது. இந்த தவறை வரும் வருடங்களில் உத்திரபிரதேச தலைமை சரிசெய்யவேண்டும் என்பதே பிஜேபி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
…..உங்கள் பீமா