Sunday, June 28, 2026
Home > அரசியல் > தணல் பறந்த தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி..! தாங்குவாரா பிரதமர் மோடி..!

தணல் பறந்த தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி..! தாங்குவாரா பிரதமர் மோடி..!

1-3-22/11.05am

சென்னை : தனியார் சேனல் நேர்காணலில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக இந்நாள் திமுக தங்க தமிழ்ச்செல்வன் தொகுப்பாளரே அசந்து போகும் அளவிற்கு பேட்டியளித்தார்.

தேனியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் 2001-2002, 2011-2016, 2016-2018 என மூன்று முறை ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஒரு முறை ஒரு வருடம் , ஒருமுறை இரண்டு வருடம் 2011 -16 மட்டும் ஐந்து வருடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2019 ஜூன் மாதம் திமுகவில் இணைந்தார். 2021ல் போடியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் தனியார் தொலைக்காட்சியில் உக்ரைனில் சிக்கிக்கொண்ட மாணவர்களை பற்றி பேசினார். அவர் பேசியதை கேட்ட தொகுப்பாளரே வாயை மூடி சிரித்தார். அவர் பேசியதாவது “உக்ரைனில் 40000 மக்கள் உயிருக்கு உத்தரவாதமின்றி போராடி கொண்டிருக்கிறார்கள். பாரத பிரதமர் என்ன செய்கிறார். அவர்களை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்தார்.

பணமதிப்பிழப்பு எப்படி செய்தார். ஒரே நாளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தினாரே. அதேபோல ஒரே நாளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அத்தனை பேரையும் மீட்க வேண்டியது தானே. உக்ரைனில் போய் டிபன் சாப்பிடுகிறார். ரஸ்யாவில் அமெரிக்காவில் சாப்பிடுகிறார். உக்ரைனில் போய் ஐந்துமதம் முன்னரே அனைவரையும் அதிகாரத்தை பயன்படுத்தி பிடித்துக் கொண்டுவரலாமே” என சாதுர்யமாக பேசினார்.

இந்த சாதுர்யத்தை கண்ட தொகுப்பாளர் மிரண்டேபோனார். வாயை மூடி சிரித்துக்கொண்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரின் பொது அறிவை கண்ட நெட்டிசன்கள் தங்க தமிழ்ச்செல்வனை கிண்டலடித்து வருகின்றனர்.

மோடியை பயமுறுத்திய தங்க தமிழ்ச்செல்வன் என விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா