கொரோனா தொற்றை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தியை தடை செய்த திமுக அரசு நேற்று நெல்லையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்த அனுமதித்தது எப்படி என நெல்லை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நேற்று இஸ்லாமியர்கள் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் யாரும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை, முகக்கவசமும் அணியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அருகருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாளையம் கோட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
நீண்ட வருடங்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற்றதாக தடா ரஹீம் என்பவர் தெரிவித்தார். “இது ஒரு ஆபத்தான போக்கு. அனைவரும் எங்கள் சாதியினரை விடுவியுங்கள் எங்கள் மதத்தினரை விடுவியுங்கள் என கிளம்பினால் சமூகத்தில் குற்றங்கள் பெருகும்.

விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்த தமிழக அரசு இப்படி ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்த எப்படி அனுமதித்தது. இந்துவிரோத போக்கை மட்டுமே தமிழக அரசு கடைபிடிக்கிறது என மக்கள் சந்தேகிக்க மாட்டார்களா .” என பெயர் குறிப்பிட விரும்பாத போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.