Thursday, March 28, 2024
Home > அரசியல் > அகற்றிய ஒலிபெருக்கிகளை முதல்வர் யோகி என்ன செய்தார் தெரியுமா..??

அகற்றிய ஒலிபெருக்கிகளை முதல்வர் யோகி என்ன செய்தார் தெரியுமா..??

cm yogi adityanath

இந்தியா : நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசமெங்கும் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கையெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றயுள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


இதனிடையே பஞ்சஜன்யா மற்றும் தி ஆர்கனைஸர் இதழ்களின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு பிஜேபி ஆளும் மாநில முதல்வர்களான ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா பிரமோத் சாவந்த், உத்தரகண்ட் புஷ்கர் சிங் தாமி, மணிப்பூர் பிரென் சிங், ஹிமாசலப்பிரதேசம் ஜெய்ராம் தாகூர், ஹரியானா எம்.எல்.கட்டார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

`

அனைத்து மாநில முதல்வர்களும் மாநில வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனம்திறந்து பேசினர். மேலும் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது குறித்த பேச்சும் அடிபட்டது. அசாம் முதல்வர் ஹிமந்தா கூறுகையில் மதரஸாக்களை விட இஸ்லாமிய மக்களுக்கு கல்வியறிவே மிக முக்கியம் என கூறினார்.

```
```

இந்தியாவின் ஹீரோ முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் என வர்ணிக்கப்படும் யோகி ஆதித்யநாத் அந்த கூட்டத்தில் பேசுகையில் ” இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மண்டலமாக உத்திரபிரதேசம் வளர்ச்சியடைந்துள்ளது. இது உத்திரபிரதேச மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

ஒலிபெருக்கிகளை எந்த ஒரு ஆர்பாட்டமோ போராட்டமோ இன்றி அமைதியான முறையில் அகற்றியிருக்கிறோம். ராமநவமி மற்றும் ஹனுமான் ஜெயந்தி தினங்களில் பல மாநிலங்களில் போராட்டமும் வன்முறையும் நடந்தபோது உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் விழாக்கள் கொண்டாடப்பட்டது .



வழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கிகள் அனைத்தும் மருத்துவமனைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் நன்கொடையாக அளிக்கப்பட்டிக்கின்றன. மசூதிகளில் ஒலிபெருக்கி சத்தம் குறைந்துவிட்டது. அதேபோல பிரதான சாலையை மறித்து தொழுகைகள் நடத்தும் சம்பவங்கள் தற்போது நிகழவில்லை என்பதை நாடறியும்” என அந்த கூட்டத்தில் முதல்வர் யோகி கூறினார்.