Tuesday, October 15, 2024
Home > அரசியல் > இதை சொன்னதா ஊடகங்கள்..? பெட்ரோல் விலை குறைப்பும் ஜார்கண்ட் அரசியலும்..!

இதை சொன்னதா ஊடகங்கள்..? பெட்ரோல் விலை குறைப்பும் ஜார்கண்ட் அரசியலும்..!

30-12-21/10.33am

ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநில அரசு அதிரடியாக பெட்ரோலுக்கு 25 ரூபாய் விலை குறைத்திருப்பதாக அனைத்து ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன

பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் விலை குறைப்பு என்பது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தாது என்பது நிதர்சனமான உண்மை. திமுக நகைக்கடன் தள்ளுபடி தில்லுமுல்லு செய்தது போல காங்கிரஸ் கூட்டணியான ஜார்கண்ட் முக்தி மோட்சா அரசும் மாநில மக்களுக்கு தலையில் மிளகாய் அரைத்துவிட்டது என பிஜேபியினர் விமர்சிக்கின்றனர்.

`

குடும்ப அட்டைதாரர்களின் இருசக்கரவாகனத்திற்கு அதுவும் மாதம் 10 லிட்டர் பெட்ரோலுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு சலுகை செல்லுபடியாகும். இங்குள்ள அனைத்து மீடியாக்களும் பெட்ரோல் விலை ரூ 25 குறைப்பு பற்றிய முழுவதுமான செய்தியை வெளியிடாமல் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக செய்திகளை திரித்துக்கூறுகின்றன என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

```
```

இந்நிலையில் இந்தியாவின் முதன்மை மாநிலம் மற்றும் இந்தியாவின் முதன்மை முதலமைச்சரான முக ஸ்டாலின் பெட்ரோல் விலையை குறைத்து எப்போது அறிக்கை வெளியிடுவார் என தமிழக அரசியல் கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

……உங்கள் பீமா