Tuesday, October 15, 2024
Home > அரசியல் > நான் யோகி மட்டுமல்ல..கர்ம யோகி…!! சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பதிலடி..!!

நான் யோகி மட்டுமல்ல..கர்ம யோகி…!! சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பதிலடி..!!

உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் தனியார் டிவி சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உத்திரப்பிரதேச அரசியல் நிலவரங்களையும் மாநிலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இதில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் “நான் பிஜேபியை விட தீவிர இந்து பற்றாளன். நான் சிறந்த ராம்பக்தனும் கூட” என பேட்டியளித்திருந்தார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் யோகி “நான் யோகி மட்டுமல்ல கர்ம யோகி. யார் ராம பக்தன் என்பதை நாடறியும். அகிலேஷ் அவர்கள் 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என கூறியிருக்கிறார். அவர் 500 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயிக்க வேண்டும். சமாஜ்வாடி ஆட்சியில் பட்ட இன்னல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

`

கடந்த 5 வருடங்களாக எந்த ஒரு கலவர சம்பவமும் நடைபெறாமல் உத்திரப்பிரதேசம் அமைதிப்பூங்காவாய் திகழ்கிறது. மேலும் மாநிலம் வளர்ச்சிப்பாதையை நோக்கி நடைபோடுகிறது. பழங்கள் காய்கறிகள் ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது.

```
```

மாநிலத்தில் இன்னும் நான்கு பெரிய மெட்ரோ நிலையங்கள் வரவுள்ளன. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றி வருகிறது. என்னுடைய அரசு மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. மேலும் வருகிற 2022 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பிஜேபிக்கே வாக்களிப்பார்கள்” என கூறினார்.

…உங்கள் பீமா