Wednesday, March 19, 2025
Home > அரசியல் > இமாலய வெற்றி..! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிஜேபி..!

இமாலய வெற்றி..! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிஜேபி..!

20-1-22/11.35am

மஹாரஷ்டிரா : மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக முத்திரை பதித்துள்ளது பிஜேபி. இது கட்சியின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலின் முடிவுகளை நேற்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மொத்தமுள்ள 1649 சீட்டுக்களில் பிஜேபி 384 சீட்டுக்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் 316 இடங்களும் சிவசேனா 284 இடங்களும் பெற்றுள்ளன. சுயேச்சை 206 இடங்கள் வெற்றிபெற்றுள்ளன.

`

இதுகுறித்து பேசிய மாநில தலைவர் சந்த்ரகாந்த் பாட்டில்,”இந்த வெற்றி மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளோம். அடுத்து வரவிருக்கும் 24 பஞ்சாயத்து தேர்தலிலும் முன்னிலை பெறுவோம். 106 நகர பஞ்சாயத்து தேர்தல்களில் 400 இடங்களில் வென்றுள்ளோம். கடந்த 26 மாதங்களாக நாங்கள் ஆட்சியில் இல்லாதபோதும் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

```
```

காங்கிரஸ் சிவசேனா கூட்டணி 600 இடங்களை பெற்று வெற்றியடைந்திருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக முத்திரை பதித்துள்ள பிஜேபி கட்சிரோலி மாவட்ட வாக்குகள் எண்ணப்படும்போது கூடுதலாக சீட்டுக்களை அள்ளும் என பிஜேபியினர் தெரிவிக்கின்றனர். தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக கட்சிரோலிவாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் மாலை வெளியாகும் என தெரிகிறது.

….உங்கள் பீமா